Header Ads Widget

Responsive Advertisement

Bee keeping in Sri lanka




நமது சுற்றுப்புற சூழலில் அழிந்துகொண்டுவரும் தேனீக்களை பெட்டிகளில் வைத்து வளர்த்தல்

உலக உணவு கோட்பாட்டில் முதன்மை வகிக்கும் தேனீ இனம் இறைவனின் அற்புத படைப்புகளில் ஒன்றாகும். உலகில் அழிந்துகொண்டு வரும் இனங்களில் தேனீக்கள் முதன்மை வகிக்கின்றன. அந்த வகையில் தேனீக்கள் இவ்வுலகில் முற்றாக அழிந்து விடுமாயின் தேனீக்கள் அழிந்து நான்கு வருடங்களில் உலகமே அழிந்து விடும்.

உணவுக் கோட்பாட்டில் முதன்மை வகிக்கும் தேனீ இனங்களை எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி, பாதுகாத்து பராமரிப்பது நம் ஒவ்வெருவரினதும் கடமையாகும்.

நமது சுற்றுப்புற சூழலில் அழிந்துகொண்டுவரும் தேனீக்களை பாதுகாகும் விதமாக தேனீக்களை பெட்டிகளில் வைத்து வளர்த்து அதன்மூலம் தேனை பெற்றுக்கொள்வதாகும்.

பெட்டியில் வைத்து வளர்ப்பதற்கு உகந்த தேனீ வகைகளை தெரிவுசெய்து தேனீக்களை வளர்க்க வேண்டும்.

பொதுவாக நான்கு வகை தேனீக்கள் உள்ளன.

01. மளைத்தேனீ
02. கொம்புத்தேனீ
03. பொந்துத் தேனீ / அடுக்குத் தேனீ
04. கொசுத் தேனீ / சிறு தேனீ

இரண்டு வகையான தேனீக்களை பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியும்.

01. பொந்துத் தேனீ / அடுக்குத் தேனீ
02. கொசு்த தேனீ / சிறு தேனீ

இந்த இரண்டு வகையான தேனீக்களை பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியும்.

அடுக்குத் தேனீ

தேனீப் பண்ணை அமைக்கத் தெரிவு செய்யும் இடம் தேனீக்களுக்கும் தேனீ வளர்ப்போருக்கும் ஏற்றதாக அமைத்தல் அவசியம்.

தேனீக் கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாகக் காணப்படுகின்றதோ அந்த இடங்கள் பொதுவாகத் தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை.

தேனீ வளர்ப்பு வெற்றி பெறவும் அதிகத் தேன் பெறவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் தேனீக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம், செடி, கொடிகள் இருத்தல் வேண்டும்.

தேனீக்களுக்குத் தேனை உற்பத்தி செய்ய மதுரமும், புழுக்களை வளர்க்க மகரந்தமும் அதிக அளவு தேவைப்படுகின்றன.

தேனீக்கு உணவு தரும் சில மரம், செடி, கொடிகள் அதன் அருகில் பல ஏக்கரில், தேனீக்களுக்கு உணவு தரும் பயிர்கள் இருத்தல் வேண்டும்.

தரமான மதுரம் உற்பத்தி செய்யும் மலர்கள் மிகுந்த எண்ணிக்கைகளில் பூத்து இருக்க வேண்டும்.

ஓர் இடத்தில் கிடைக்கும் மதுர அளவைப் பொறுத்து அவ்விடத்தில் வைக்கப்படும் தேனீக் கூட்டங்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்.

தேனீக்களுக்குத் தூய்மையான தண்ணீர் அவசியம் தண்ணீர் கூட்டின் வெப்ப நிலையைக் குறைக்கவும் அவசக் கூழ் உற்பத்திக்கும் தேனின் கெட்டித் தன்மையைக் குறைக்கவும் தேவைப்படுகின்றது.

தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவ நிலை நிலவும் இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

அதிக வெயில் அதிவேகமான காற்று மற்றும் கன மழை ஆகியவை தேனீக்களைப் பாதிக்கும் அதிக காற்றும் மழையும் பணித் தேனீக்களின் உணவு திரட்டும் திறனை பாதிக்கின்றன.

தேனீகள் இருக்கும் இடம் போதிய வடிகால் வசதியுடனும் இருக்க வேண்டும்.

வடிகால் வசதியற்ற இடங்களில் காற்றின் ஈரப்பதம் எப்பொழுதும் கூடுதலாக இருக்கும். இதனால் தேன்முதிர்வது பாதிக்கப்படும்.

or more details visit my links
hY&list=PL5500v7iJO6Au6tWZNazUz_Ne_2JGqTgl
https://www.linkedin.com/company/msbeefarm?trk=recent-update_content#updates
https://twitter.com/hashtag/msbeefarm
https://www.youtube.com/channel/UC8yn1GWlYnVkSVrVwKtJkng
https://www.facebook.com/pg/Msbeefarm-588532581595528/posts
https://plus.google.com/+MSMOHAMED
http://tamilmsm.blogspot.com/
https://msbeefarm.business.site/
https://msbeefarm.wordpress.com/
https://www.pinterest.cl/pin/847028642395417378/
https://createyoutube.com/st/ntOTxLEadns/?fb_comment_id=1970956212951774_1970957006285028
https://www.pinterest.com/msbeefarm/
https://msbeefarm.blogspot.com/
https://video.bosagus.com/watch?v=ntOTxLEadnshttps://www.facebook.com/beeunion/videos/beekeeping/233772167391384/
https://idreporter.net/word/msbeefarm
https://www.facebook.com/588532581595528/videos/391328031629584/
https://www.facebook.com/people/Ms-Mohamed/100001509858302
https://msbeefarm.blogspot.com/2019/01/beekeeping-sri-lanka.html

Post a Comment

2 Comments

Thanks for Reading
connect us cautiously than you again