VAT வரியை 18% அதிகரிக்காமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது
![]() |
VAT வரியை 18% அதிகரிக்காமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது |
இலங்கை நாட்டை சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசு VAT வரியை 18% அதிகரிப்பதற்கான தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.
எதிர்வரும் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 18 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது 15 வீதமாக காணப்பட்ட VAT வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான யோசனை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
VAT வரியை 18% அதிகரிப்பது தொடர்பாக ஜானாதிபதி ரனில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில் நாட்டின் பொருளாதர நிலையை கட்டியெலுப்புதற்கு VAT வரியை 18% அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
இலங்கை பிச்சை எடுக்கும் நாடாக இல்லாமல் பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப எவ்வளவு சிரமமான தீர்மானமாக இருந்தாலும் இன்றைய தினம் எடுக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும். மாறாக சரியான தீர்மானங்களை பிழையான நேரத்தல் எடுப்பது, பிழையான தீர்மானத்தை சரியான நேரத்தில் எடுபப்பதால் எந்தவித பிரயேசனமும் இல்லை.
எனவே இந்த காலம் தான் சரியான தீர்மானங்களை சரியாக எடுக்க வேண்டிய காலம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
VAT வரியை 18% அதிகரிப்பதற்கான தீர்மானம் தானோ அல்லது அமைச்சரவையோ தானாக முன்வந்து எடுக்கவில்லை என்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானம் எனத் தெரிவித்தார்.
நாம் தேர்தலை நெருங்கியுள்ள காலத்தில் இவ்வாரான தீர்மானங்களை எடுப்பது பாராளுமன்றத்திற்கு கடினமான விடயம்.
இன்றைய இளைஞர் சமூகத்தின் தலைமைத்துவமும் நாட்டுக்காத் தீர்மானங்களை எடுக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காக உழைக்கக் கூடிய இளம் அமைச்சர்கள் குழுவொன்று இன்று அரசாங்கத்தில் செயற்பட்டு வருவகின்றது.
அவர்களுடன் இணைந்து சிறந்த பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்குச் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
VAT வரியை 18% அதிகரிப்பும் அரசாங்கத்தின் வருமான நிலையும்
அடுத்த வருடம் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் VAT வரியை 18 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது 15 வீதமாக காணப்படும் வட் VAT வரியை 18% வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான யோசனை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்ததும் 15 வீதமாக காணப்பட்ட வட் வரி வீதத்தை 8 வீதமாக குறைத்தார்.
2020ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியின் போது 15 வீதமாக உயர்த்தப்பட்டது.
"2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் முதல் 9 மாதங்களில் அரச வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்ட வரி திரட்டுக்கான இலக்கு இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
வரி வருமானம் மற்றும் ஆரம்ப மீதி இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள சேர் பெறுமதி வரி வீதத்தை 2024.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again