உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா!
உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா! |
icc world cup 2023: இந்தியாவில் நடைபெற்று வந்த 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி 6ஆவது தடவை உலகக் கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்துள்ளது.
உலகக் கிண்ணம் 2023: பருவகால தொடரின் சம்பியன் பட்டத்தை பெற்ற அவுஸ்திரேலியா அணியின் தலைவராக செயற்பட்டு பெட் கமின்ஸ் 6ஆவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றினார்.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணி சார்பாப அலன் போர்டர், ஸ்டீவ், ரிக்கி பொன்டிங் (2 தடவைகள்), மைக்கல் க்ளார்க் ஆகியோர் அவுஸ்திரேலியா அணியை விழிநடத்தி உலக சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர்.
icc world cup 2023: பருவகாலப் போட்டியில் சம்பயினான அணிக்கு இலங்கை நாணய மதிப்பீட்டின் படி 131 கோடி ரூபா பரிசும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 65 கோடி ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
icc world cup 2023: இந்தியாவில், நரேந்திர மேடி மைதானத்தில் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போடியில் இந்தியா அணியை அவுஸ்திரேலியா அணி வீழ்த்தி 6ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்து.
இறுதிப் போட்டியில் நானயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி இந்தயா அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதன் படி உலகக் கிண்ண 2023 பருவகால இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தியா அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் ஷர்மா, சுக்மன் கில் ஆகியோர் ஆடுகளம் புகுந்தனர்.
இந்தியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சுக்மன் கில் 7 பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களைப் பெற்றபோது அடம் சம்பாவின் பந்தில் மிச்சல் ஸ்ராக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அணித்தலைவருடன் ஜேடி சேர்ந்த விராத் கோஹ்லி இந்தியா அணியின் ஓட்டத்தை சற்று உயர்த்தினர்.
இதன் போது ரோஹித் சர்மா 47 ஓட்டங்களை பெற்று மெக்ஸ்வெல்லின் பந்து வீச்சில் ஹெட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சுரேஸ் ஐயர் வெறும் 4 ஓட்டங்கள்ப் பெற்று ஆடுகளம் சென்றார்.
இதனைத் தெடர்ந்து இந்தியா அணி இக்கட்டான நிலையை அடைந்தது.
இதன் பின்னர் ஜேடி சேர்ந்த கே.எல். ராகுல் விராட் கேஹ்லி இணைப்பட்டம் இந்தியா அணிக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது.
இந்தியா அணி சார்பாக விராட் கோஹ்லி 54 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
அது தவிர அணித்தலைவர் ரோஹித் சர்மா 47 ஓட்டங்களைப் பெற்றார். ஏனையோர் 20 ஓட்டங்களைக் கூட கடக்கவில்லை.
விராட் கோஹ்லியின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் இந்தியா அணியின் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.
இந்திய அணி தனது இன்னிங்ஸில் மொத்தமாக 13 பவுண்டறிகளே விளாசியிருந்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பாக பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலியா அணி 241 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியது.
அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பமும் எதிர்பார்த்தது போன்று சிறப்பாக அமையவில்லை.
இந்தியா குறைந்தளவு ஓட்டங்களைப் பெற்றதால் சோர்வடைந்திருந்த இரசிகர்கள், அவுஸ்திரேலியாவின் முதல் 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதும் உயிர்பெற்று ஆரவாரம் செய்தனர்.
அவுஸ்திரேலியா அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆடுகளம் சென்றார்.
தொடர்ந்து மிச்செல் மார்ஷ் 27 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தர்.
ஸ்டீவன் ஸ்மித் 7 பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
இவருடைய ஆட்டமிழப்பு எல் பி டபல்யூ முறையில் நடுவர் ஆட்டமிழந்தார் என தொரிவிக்கப்பட்டது.
அவர் ரிவிவ் எடுத்திருந்தால் அவருடைய ஆட்டமிழப்பை தடுத்திருக்கலாம். ஆனால் அவருடைய ஆட்டமிழப்பு துரதிஸ்டவசமானது.
அவுஸ்திரேலியா அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட விர்ர்கள் மூவரும் வேகமாக ஓட்டங்களைப் பெற முயற்சித்து விரைவாகவே ஆட்டம் இழந்தனர்.
ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 192 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
120 பந்துகளை எதிர்கொண்ட ட்ரவிஸ் ஹெட் 15 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார்.
அவருக்கு பக்கபலமாக மிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய மானுஸ் லபுஷேன் 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இந்தியா அணி சார்பாக, பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 47 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தியா அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்று வெறியீட்டியது.
உலகக் கிண்ண 2023 பருவகால சுற்றுப் போட்டியில் இந்தியா அணி அரை இறுதிவரை அமோகமனா ஆட்டத்திறனை வெளிப்படுத்திவந்தது.
இறுதிப் போட்டியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இரசிகர்கள் முன்னிலையில் அழுத்தத்துக்கு மத்தியில் விளையாடியதை அவதானிக்க முடிந்தது.
0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again