ஹமாஸின் தாக்குதலுக்கான பதிலடி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுக்குள் இன்னும் துப்பாக்கியேந்திய பாலத்தீனர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை மீட்பதற்காக எல்லாவற்றையும் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலில் பரந்த கூட்டணி அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் காசாவில் சுமார் 1000 இலக்குகளை தாக்கியிருப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியிருக்கிறது.
இஸ்ரேலிய தரப்பில் 900 பேரும் காசாவில் 690 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்போரை எந்தவிதமான எச்சரிக்கையுமின்றி கொல்லப் போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸின் தாக்குதலில் காயமடைந்த ஏராளமானோர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் இஸ்ரேல் கூறியிருக்கிறது.
இது தங்கள் மீதான செப்டம்பர் 11 தாக்குதல் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.
சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல்களில் 1100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் 1,23,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியிருக்கிறது.
(பிபிசி தமிழ் )

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again