Header Ads Widget

Responsive Advertisement

50 சதம் கூட சம்பளத்தை உயர்த்த முடியாது -பந்துல குணவர்தன

50 சதம் கூட சம்பளத்தை உயர்த்த முடியாது -பந்துல குணவர்தன

50 சதம் கூட சம்பளத்தை உயர்த்த முடியாது -பந்துல குணவர்தன
50 சதம் கூட சம்பளத்தை உயர்த்த முடியாது -பந்துல குணவர்தன

அரச ஊழியர்களுக்கு முறையான சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனாலும் அமைச்சர் பந்துல குணவர்தன அரச ஊழியர்களுக்கு 50 சதம் கூட சம்பளத்தை உயர்த்த முடியாது எனக் கூறியுள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்துகொண்டிருக்கிறது. அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 சதம் கூட உயர்த்த முடியாது. 

அரசாங்கம் ஏற்கனவே மிகவும் சிரமப்பட்டு சம்பளம் வழங்குகிறோம் என அமைச்சர் பந்துல குணவர்தன கூயியுள்ளார்.

மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியினால் நாடு பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், படிப்படியாக நல்லதொரு நிலை உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கடன் மறுசீரமைப்பு முடியும் வரை நாடு மீண்டும் கடன் பெற முடியாது என்றும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மொத்த வரி வருமானத்தில் 72% அரச சேவைக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டதாக தெரிவித்த அவர், சமுர்த்தி மற்றும் ஏனைய மானியங்களுக்கு ஐநூறு பில்லியன் செலவிடப்பட்ட போது திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானத்தில் ஒரு சதம் கூட மீதம் இருக்கவில்லை.

இந்நிலையில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதை போராட்டக்காரர்கள் காட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொட பின்னர் ஊடகவியலார்களின் கோள்விகளு விடையளிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனால், அரச ஊழியர்களுக்கு முறையான சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments