ஒக்டோபர் மாதம் மார்பகப் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இம்முறை, 'முன்னரே அறிந்து உயிரை பாதுகாப்போம்.' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் இம்முறையும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு 4 புதிய மார்பகப் புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதோடு, இரு மார்பக புற்று நோயாளர்கள் உயிரிழக்கின்றனர்.
5,189 நோயாளர்கள் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் சுராஜ் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதனடிப்படையில் ஒரு நாளைக்கு 14 நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பகால நோயறிதல் நிலையானது நோயைக் குணப்படுத்த வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார், நோய்வாய்ப்பட்ட சுமார் 10,000 பெண்களுக்கு முழுமையாக சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்த மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை 31,800 மார்பகப் புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய மணித்தியாலயத்திற்கு 4 புதிய மார்பக புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதோடு, இருவர் உயிரிழக்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் புதிததாக 4500 மார்பகப் புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
ஆண், பெண் என இரு பாலாருக்கும் ஏற்படக் கூடியது தான் மார்பகப் புற்று நோய். ஆனால் இதில் 100 வீத அபாயத்திற்கு உள்ளாகக் கூடியவர்கள் பெண்கள். மது அருந்துதல், புகையிலை உண்ணல் மற்றும் புகைப்பிடித்தல் என்பவற்றின் காரணமாகவும் தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் பரம்பரையின் காரணமாகவும் புற்று நோய் ஏற்படுகிறது.
ஆனால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். எனவே 20 வயதுக்கு மேற்பட்ட சகல பெண்களும் வாராந்தம் மார்பக புற்று நோய் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again