காலத்தின் தேவை: ஒரு நாளைக்கு 10 மணித்தியால வேலை!
![]() |
| காலத்தின் தேவை: ஒரு நாளைக்கு 10 மணித்தியால வேலை! |
உலகலாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குப் பின்னர் சில பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலும், குறிப்பாக வர்த்தக ரீதியாக, தொழில் ரீதியாக மாபெரும் புரட்சி உருவாகியுள்ளது. பாரம்பரிய முறைகளில் மாற்றம் ஏற்பட்டுவிட்டன. அதிலும் குறிப்பாக அனைத்து நாடுகளிலும் இணையத்தள வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்ச்சியடையாத நாடுகளிலும் சரி, இணையத்தள வர்த்தகம் அனைத்து வழிகளிலும் தாக்கம் செலுத்தி வருகிறது.
சமூக ஊடகங்கள் விளம்பரங்களில் முனைப்பை செலுத்தி வருகின்றன. தொழிற்சாலைகள், வீடுகளை நோக்கியும் நகர்ந்துள்ளன.
வேலையற்றோர் பிரச்சினை உலகளாவிய ரீதியில் தற்போது பெரிய பூதாகரமாகி வருகின்றது.
வேலையற்றோர் எண்ணிக்கை 7.01 வீதமாக காணப்படுகின்றது.
உலகலாவிய ரீதியில் அதி கூடிய வேலையற்றோர் வீதம் சூடானில் 45.9 ஆகவும், ஆகக் குறைந்த வேலையற்றோர் வீதம்தாய்லாந்தில் 1.25 வீதமாகவும் காணப்படுகின்றது.
அதேபோன்று இலங்கையில் வேலையற்றோர் விகிதம் 5.5 ஆகக் காணப்படுகின்றது.
இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலை தொடருமானால் இலங்கையில் தொழில் தேர்ச்சி பெற்றோருக்கு பாரிய பற்றாக்குறை நிலவும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையில் அனைத்து துறைகளிலும் உள்ள படித்த, அந்தத் துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
குறிப்பாக சுகாதாரத் துறையில் உள்ள சிறந்த வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடகளுக்குச் சென்றுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டில் பணவீக்கம், அரசியல் காரணிகள் என பல்வேறு காரணங்களினால் மென்மேலும் பொருளாதார நிலைமை அதள பாதாலத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்றன.
இதன் காரணமாகவும் பலர் வெளிநாடுகளை நோக்கிச் செல்கின்றனர்.
நாடு பொருளாதார ரீதியாக முன்னேறவேண்டுமானால் சிறந்த ‘தொழிலாளர்கள் படை’ இருப்பது அவசியமாகும்.
அதன்மூலமே ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக சகல துறைகளிலும் கட்டியெழுப்ப முடியும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் அரச நிறுவனங்களில் அரச ஊழியர்கள் பலர் தமது எட்டு மணிநேர கடமையில் அரைவாசி நேரத்தைக் கூட சரியாக செய்வதில்லை.
இரண்டு மணிநேரமாவது அவர்கள் கடமையில் ஈடுபடுவதில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்படுகின்றன. அதுவே உண்மையான நிலைப்பாடாகவும் உள்ள.
அரச துறைகளில் பணியாற்றுபவர்களில் 80 வீதமானவர்கள் உரிய நேரத்துக்கு கடமைக்கு சமுகமளிப்பதில்லை.
நேரம் கடந்து கடமைக்கு வந்தபின்னரே காலை உணவுக்கு செல்வது, அதுவும் நீண்டநேரம் சிற்றூண்டிச்சாலையில் கழிப்பது. மாலையில் நான்கு மணிக்கு கடமைகளை நிறைவு செய்து கொண்டு வீடு செல்ல தயாராவது என பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.
சீராக இயங்கா நிறுவனமொன்றுக்கு அரச அலுவலகங்களையே உதாரணமாக கூறி கேலி செய்யும் அளவுக்கு நிலைமைகள் உள்ளன.
இதனால் அரச அதிகாரிகளானால் கூட தமது ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
மாறாக, தனியார் நிறுவனங்கள் நேர்மாறாகவே காணப்படுகின்றன.
அதுவே அதன் வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது.
தற்போது, அரச ஊழியர்களின் வேதனத்துடன் ஒப்பிடுகையில் அவர்களின் வேதனம் பன்மடங்கு அதிகமாகவும் காணப்படுகின்றது.
அதனால் அதிக எண்ணிக்கையானோர் தனியார்துறைகளில் கடமையாற்ற விரும்பியதுடன் அரசதுறைகளுக்கு ஈடாக நியமனங்களையும், ஊதியங்களையும் பெற்று வந்தனர். தற்போது அதுவும் மாறற்மடைந்து வருறது.
இன்றைய சூழலில் தனியார்துறையும் அரசதுறைக்கு ஈடான நிலையே காணப்படுகின்றன.
இளைஞர்கள் பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்க தனியார் நிறுவனங்கள் கூட முன்வருவதில்லை. ஏற்கெனவே நிறுவனத்தில் கடமை புரிபவர்களுக்கும் கூட வேதனங்களை குறைத்து வழங்குகின்றன.
இவற்றுக்கு பிரதான காரணம் இன்றைய இளைஞர்களுக்கு போதிய கல்வித்தகுதியோ, அனுபவமோ கிடையாது.
அவர்கள், அதிக நேரத்தை சமூக ஊடகங்களிலேயே செலவிடுபவர்களாகவும் பொறுப்புணர்ச்சியற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
அனைத்துக்கும் மேலாக குறித்ததோர் நிறுவனத்தில் வாரக்கணக்கில், மாதக்கணக்கிலேயே பணிபுரிபவர்களாகவும் காணப்படுகின்றனர். என்று தனியார் தொழில்வழங்குநர்கள் கூறுகின்றனர்.
இப்படியான சவால்கள் காரணமாக தனியார்நிறுவனங்களும் அரச நிறுவனங்களை ஒத்ததாக மாறிவருவதுடன் பாரிய நஷ்டங்களையும் எதிர்நோக்கி வருகின்றன.
தற்போதைய இறுக்கமான தொழிற்சட்டங்களுக்கு மத்தியில் ஒருவருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவது தொடர்பிலும் தயக்கம் காட்டப்படுகின்றது.
குறிப்பாக அவர் தனது கடமையை சரிவர மேற்கொள்ளாத பட்சத்தில் அவரை உடனடியாக வேலை நீக்கம் செய்ய முடியாது.
இது பொன்ற காரணிகள் தனியார்துறையினர் அதிகளவு இளைஞர்களுக்கு தமது நிறுவனங்களில் தொழில்வாய்ப்பை வழங்க முன்வராமைக்கான காரணங்களாக உள்ளன.
இந்த இக்கட்டான நிலைமையை நிவர்த்தி செய்ய இளைஞர் யுவதிகள் சமூக ஊடகங்களில் தமது காலத்தை கடத்துவதை நிறுத்தி சமூகப் பொறுப்புடன் தமது பணிகளை முன்னெடுக்க முன்வரவேண்டும். பொறுப்புணர்வும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையும் அவசியமானது.
இன்போசிஸ் (Infosys) நிறுவன ஸ்தாபகர் நாராயணமூர்த்தி ஒருநாடு உலகளவில் போட்டியிட இளைஞர்கள் வாரமொன்றுக்கு 70 மணிநேரம் வேலை செய்யவேண்டுமென்று கூறியுள்ளார்.
இவருடைய கருத்தை அறிவுரையை ஒரு சிலர் வரவேற்கின்றனர். ஒரு சிலர் மறுதலிக்கின்றனர்.
ஒரு நாடு தனது உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும். உற்பத்திகளை அதிகரிக்காமல் போனோலோ அரசாங்கம் ஏதாவது ஒரு வழியில் ஊழல்களை ஒழிக்காமல் போனாலோ தீர்மானங்களை எடுப்பதில் நிலவும் காலதாமதத்தை குறைக்காமல்போனாலோ அபரிமிதமாக வளர்ச்சிகாணும் நாடுகளுடன் நாம் போட்டி போட முடியாத நிலை ஏற்படும்.
எனவே, ‘இது எனது நாடு’ ஒரு வாரத்தில் 7 நாள் செய்கின்றோம் ஒரு நாளைக்கு 10 மணிநேரம், வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்வேன் என்று இளைஞர்கள் உறுதிபூணவேண்டும் என்று அவர்களை கோர விரும்புவதாக நாராயணமூர்த்தி கூறுகிறார்.
ஜேர்மனியர்கள் இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின்னர் சில வருடகாலங்களுக்கு மேலதிக நேரவேலையில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்.
ஒவ்வொரு நாடும் வளர்ச்சியடைந்த நாடாக மாறவேண்டுமானால் கடின உழைப்பு அவசியம்.
எமது மூதாதையர்கள் அவ்வாறு கடுமையான தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இளைஞர் யுவதிகள் கடுமையாக வேலை செய்வதன் மூலம் உற்பத்தி மாத்திரம் அன்றி அவர்களின் ஆற்றலும் மேம்படும்.
வர்த்தகம் ஒன்றை கற்றுக்கொள்ள ஒருவருக்கு 10 ஆயிரம் மணி நேரம் அவசியம். அதில் அவர் தேர்ச்சி அடைய வேண்டுமானால் 20 ஆயிரம் மணி நேரம் அவசியம். எனினும் அவர்கள் விரைவாக அதிலிருந்து வெளியேறி விடுகின்றனர் என்று ஹரிமோகன் கருத்து வெளியிடுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 10 மணிநேர வேலை என்பது அர்ப்பணிப்புடன் கூடிய ஒன்றாகும்.
டுவிட்டரை பொறுப்பேற்றவுடன் உலக செல்வந்தரான எலன்மஸ்க் தனது டுவிட்டரில் ஊழியர்களுக்கு அதிகாலை 2 மணிக்கு அனுப்பிவைத்த மின்னஞ்சலில் நீண்டநேரம் உறுதியுடன் வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அதுவே அவரது பதவியை இராஜிநாமா செய்ய காரணமாக அமைந்தது.
இன்றைய இளைசர் யுவதிகள் தமது கடமைகளை அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் செய்ய வேண்டியது காலத்தின் கடமையாகும்.
இவ்வாறு செய்வார்களாயின் பொருளாதார நெருக்கயில் சிக்கயுள்ள நாட்டையும், தங்களின் எதிர்காலத்தையும் முற்னேற்ற முடியும்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again