Header Ads Widget

Responsive Advertisement

பணித் தேனீக்கள் ஆற்றும் பணிகள்

பணித் தேனீக்கள் ஆற்றும் பணிகள்


தேனீக் கூட்டத்தில் அதிகளவு காணப்படுகின்ற தேனீக்கள் பணித் தேனீக்கள். 95 வீதமானவை பணித் தேனீக்களாகும்.

பணித் தேனீக்களின் வாழ் நாள் முழுவதும் பணிசெய்வதே தவிர வேறு ஒன்றும் இல்லை. இதனால் தான் பணித் தேனீ என்ற பெயர் இந்த வகை தேனீக்களுக்கு வந்தது.

பணிகள்

தேனீக் கூட்டத்தில் உள்ள அனைத்து விதமான பணிகளையும் பணித் தேனீக்களே செவ்வன செய்கின்றன. 

இவை வெளியான நாள் முதல் இறக்கும் காலம் வரை காலத்துக்கு காலம் அதன் பணிகளையும் மாற்றியமைத்து கொண்டு அனைத்து பணிகளையும் செய்து முடிக்கின்றன.

கூட்டில் இருந்து தேனீயாக வெளியே வந்ததும் முதல் வேலையே தாங்கள் இருந்த கூடுகளை சுத்தம் செய்து ஏயை அடை அறைகளையும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்கின்றன. 

அது மாத்தமல்லாமல் கூட்டின் வெப்ப நிலையைக் கூட பராமரிக்கின்றன.
இவ்வாறு மூன்று நாள் முடிந்ததும் நான்காம் நாளை அடைந்த தேனீக்கள் தங்களின் அடுத்த கட்ட வேலைக்கு தயாராகின்றன. 

நான்காம் நாள் தொடக்கம் ஆராம் நாள் வரைக்கும் தேனீக்கள் எடுத்து வந்து வைக்கும் மதுர துகள்களை தன்னுடைய சிறகால் தேன் கூட்டில் அடுக்கும் வேலையைச் செய்யும்.

இவ்வாறு இரண்டு கட்டங்களை தான்டி மூன்றாவது கட்டமாக ஏழாம் நாளை அடைந்ததும் அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்கின்றன. 

இந்த வகை பணிகள் பதின் நான்காம் நாள் வரை தொடரும். அவையாவன ராணித்தேனீக்கு தேவையான ரோயல்ஜெல்லியை உருவாக்கி ஊட்டிவிடும்.  

அது மட்டுமல்லமல் இந்த வயதுடைய தேனீக்கள் தான் அறு கோன வடிவிலான தங்களின் கூட்டை கட்டும் கட்டுமான  வேலையையும் செய்கின்றன.

பதின் ஐந்தாம் நாள் தொடக்கம் இருபத்து மூன்றாம் நாள் வயதுடைய தேனிக்கள் மருத்துவ தேனீக்கள்,  பல வகையான வேலைகளை செய்கின்றன. 

பாதுகாப்புத் தேனீக்கள் எதிரிகளிடமிருந்து தங்களையும் தங்களின் கூட்டத்தாரையும் தங்களின் கூட்டையும் பாதுகாக்கும் பணிகளையும் செய்கின்றன.

பிரிதொரு கூட்டம் இறந்த தேனீக்களை வெளியில் கொண்டு போடுதல் மற்றும் தேனீக் கூட்டில் உள்ள தேவையற்ற கழிவுகளையும் வெளியில் கொண்டு வீசுதல் போன்ற வேலைகளையும், மூன்றாவது கூட்டம் நேயுற்ற தேனீக்களையும் வெளியில் சென்று வரும் தேனீக்களையும் உடல் நலன்களை கவனித்து மருத்துமளித்தல் போன்ற வேலைகளை செய்கின்றன.

#beekeeping  #beekeeping in sri lanka #beekeeping sri lanka #msbeefarm #addalaichenai
பணித் தேனீக்கள் ஆற்றும் பணிகள்

இருபத்து மூன்றாம் நாள் தொடக்கம் இருபத்து ஐந்தாம் நாள் வரையான தேனீக்கள்  தேன்கூட்டின் ஒற்றர்கள்

பூக்கள் எவ்வளவு தூரம் உள்ளன என்பதை அறிந்து ஏனைய வயள்வெளி தேனீக்களுக்கு தகல்களை அறிவிக்கும்.

ஒற்றர்தேனீ தனது வயிற்றை ஆட்டி வட்டம் போட்டு பணியாளர் தேனீக்குத் எவ்வளவு தூரத்தில் தேன் இருக்கிறது என்பதை காட்டும்.

இருபத்து ஐந்தாம் நாள் தொடக்கம் இறக்கும் காலம் வரைக்கும் வயள்வெளி தேனீக்களாக மாறி ஒற்றர்கள் காட்டிய திசையில் இருக்கும் மகரந்தங்களை தேன் சேகரிக்கும் பையிலும், தனது வயிற்றில் மதுரத்தையும் சுமந்து வரும் வேலையும் செய்யும்.

ஒரு தேனீ தனது வாழ்நாளில் ஆறு அடை அறைகளையே கட்டும். தேனீக்கள் ஒரு தேக்கரண்டி தேனை சேகரிக்கும். 

இதற்காக ஒருநாளில் 50 ஆயிரம் மலர்களில் அமர்ந்து தேனீக்கள் தேனை சேகரித்து வருகின்றன.

எம்.எஸ்.முஹம்மட் (தலைவர்)
கிழக்கிலங்கை தேனீ வளர்ப்பு ஒன்றியம்,
அட்டாளைச்சேனை.
மேலதிக விபரங்களுக்கு 0774024485.

or more details visit my links

Post a Comment

0 Comments