சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 23 பேர் மாத்தறை வெலிகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 23 பேர் மாத்தறை வெலிகம பகுதியில் வைத்து இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
வெலிகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் வவுனியா, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் குறித்த நபர்களில் நான்கு பெண்கள் உட்பட 14 தமிழர்கள், 7 சிங்களவர்கள் இரண்டு முஸ்லிம்கள் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again