வரவு - செலவுத்திட்ட வரைபை சமர்ப்பித் ஜனாதிபதி!
வரவு - செலவுத்திட்ட வரைபை சமர்ப்பித் ஜனாதிபதி! |
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்டத்தின் திட்ட வரைபு முன்மொழிவுகளை செயற்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை வழங்க அழைப்பு விடுத்தார்.
வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள்:
* புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது. ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
*2023 ஆம் ஆண்டு 3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது.ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி.
* 2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
* அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு
* கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல் இந்தியாவின் சென்னை IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், நிதியமைச்சர்,
* உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், அவற்றை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* 19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
* பொருளாதார நெருக்கடிக்கு கடினமான தீர்மானங்களை செயற்படுத்தாவிட்டால் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவ யாரும் முன்வரமாட்டார்கள்.
* நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடினமான தீர்மானங்கள் இல்லாமல் போலியான அழகான விடையேதும் கிடையாது.
* எதிர்காலத்தை சிறந்த முறையில் வெற்றிகொள்ள வேண்டுமாயின் நிலைபேறான பொருளாதார கொள்கை செயற்படுத்த வேண்டும்.
* பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் 60 சட்டங்கள் காலத்துக்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்யப்படும்.
* அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
* கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
* அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் போன்ற தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும்.
* இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும்.
* திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும்.
* வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் அமுலாக்கம், செலவு தொடர்பில் மாகாண சபைகள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
* உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு.
* பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா.
* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தூய்மையான குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு.
* வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
* சகலருக்கும் ஆங்கிலம் 'திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றிபெறும்.
* சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
* சுற்றுலா கைத்தொழில் துறையை மேம்படுத்த 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிவிட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.
* வீட்டு உரிமை முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும்.
* பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
* சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு.
* அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.
* அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
* நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும்.
* ஓய்வூதியக்காரர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு.
* வீதி புனரமைப்புக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
*மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
* கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் வரி 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும்.
* சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
* விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு.
* தேர்தல் வெற்றியல்ல நாட்டின் வெற்றியே எனக்கு முக்கியம்.
* பொருளாதார பாதிப்பினால் 30 சதவீதமாக உயர்வடைந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
* நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம்.
* சகல அபிவிருத்திகளையும் எதிர்த்து எதிர்காலத்தையும் கொள்ளையடிக்க வேண்டாம்.
0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again