Header Ads Widget

Responsive Advertisement

Gaza: காஸா எனும் சுடுகாடு மாத்திரமே எஞ்சியிருக்கும்!

Gaza: காஸா எனும் சுடுகாடு மாத்திரமே எஞ்சியிருக்கும்!

Gaza: காஸா எனும் சுடுகாடு மாத்திரமே எஞ்சியிருக்கும்!
Gaza: காஸா எனும் சுடுகாடு மாத்திரமே எஞ்சியிருக்கும்!

காஸா - இஸ்ரேல் போர் 31ஆவது நாட்களாக தொடர்கின்ற நிலையில் இரு தரப்பிலுமாக 11ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி அதிகாலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தினர். இசை விழாவில் பல ஆயிரக்கணக்கான கலந்துகொண்டிருந்தனர். அவர்களை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடுத்தனர். 

அவர்களில் 200க்கும் அதிகமானவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து  காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸூடன் போரை ஆரம்பித்தது. 

ஹமாஸின் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 11,330 க்கும் அதிகமானோர் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து இடம் பெறு வரும் வெறித்தனமான தாக்குதலினால் காஸாவில் உள்ள அப்பாவி மக்கள் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளுக்கு ஐ.நா. அதன் விநியோக மையங்களை அமைத்து கோதுமை மாவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்கி வருகின்றது. 

குடிப்பதற்கு கூட தற்போது உப்பு கலந்த தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும்  ஐ.நா.கவலை வெளியிட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் காஸாவின் மருத்துவமனைகள் அரிதாகவே செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

அதேவேளை, கடந்த வாரம் உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சுமார் 500  லொறிகள் எகிப்தில் இருந்து ரஃபா எல்லை வழியாக காசாவிற்குள் நுழைந்தன.

பொறுமை இழந்த மக்கள் கடந்த வாரம் ஐ.நா. களஞ்சியசாலைகளை உடைத்து பெருமளவு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனைகள், தங்குமிடங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் அமைப்பு ஆகியவற்றுக்கு மின்சாரம் வழங்கப்படாமையால் அவை செற்பட முடியாதுள்ளன. 

இஸ்ரேல் எரிபொருள் விநியோகத்தை அனுமதிக்க மறுத்துவிட்டது. 

காஸா பகுதியில் உள்ள மக்களை காஸாவின் வடக்கு பகுதியிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து 1.45 மில்லியன் மக்கள் தெற்கு பக்கமாக சென்றுள்ளனர். 

பொதுவாக 400,000 மக்கள் வசிக்கும் தெற்கு நகரமான கான் யூனிஸின் மக்கள் தொகை தற்போது சுமார் 1.25 மில்லியனாக அதிகரித்துள்ளது. 

இடம்பெயர்ந்தவர்கலில் பல குடும்பங்கள் அங்கு உள்ளவர்களின் வீடுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு சில தற்காலிக கூடாரங்களில் தங்கி வாழ்கின்றனனர். 

Gaza: காஸா எனும் சுடுகாடு மாத்திரமே எஞ்சியிருக்கும்!
Gaza: காஸா எனும் சுடுகாடு மாத்திரமே எஞ்சியிருக்கும்!

இஸ்ரேலிடமுள்ள பாதுகாப்பு வளங்களைப் பார்க்கும்போது, ஹமாஸின் தாக்குதலை எதிர்பார்க்காதது வியப்பளிக்கிறது என்று விமர்சகர்கள் பலராலும் விமர்சனத்துகு உள்ளாக்கப்படுகின்றது. 

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு இந்த ஆண்டுதான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது.

 இது திட்டமிட்ட சதியாகக் கூட இருக்கலாம் எனவும், இதுவே இஸ்ரேலைத் தாக்க ஹமாஸைத் தூண்டியிருக்கலாம் என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்டடு பனயக் கைதிகளாக உள்ளவர்களில் இன்னும் 229 பேர் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் குறைந்தது 60 வயதுக்கு மேற்பட்ட 10 பேர் அடங்குவர்.

இராணுவ சிப்பாய்களும் பணயக்  கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். 

ஹமாஸ் படையினர் இதுவரை நான்கு பணயக்கைதிகளை மாத்திரம் விடுத்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் படையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட  தாக்குதலை தொடர்ந்து, காஸாவில்  ஹமாஸ் கட்டமைப்பை இல்லாதொழிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் மேசமான  தாக்குதலை நடத்தி வருகிறது.

மனிதாபிமானம் குறித்தோ மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்தோ அது கவலை கொள்ளவில்லை. 

அதிநவீன மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி  தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன.

காஸா பகுதியில் உள்ள ஜபாலியா முகாம் மீதான தாக்குதலின்போது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று உணர்ந்ததாக மக்கள் கூறுகின்றனர்.

அழிந்து போயுள்ள காசாவை மீள கட்டியெழுப்ப வேண்டுமாயின் 100 வருடங்களுக்கு மேல் தேவைப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் ஹமாஸின் ஏவுகணை தளங்களை அழிப்பது, சுரங்கப்பாதைகளை  முழுமையாக தகர்ப்பது, பலஸ்தீன மக்களை எகிப்தின் எல்லை வரை தள்ளுவது என்ற ஒரு தீர்மானத்தோடு இத்தாக்குதலை நடத்துகின்றது.

இதற்குப் பிறகு காஸாவில் மக்கள் இருக்கக் கூடாது, இவர்கள் இருந்தால்தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள்.

இவர்களை அடியோடு இல்லாமல் ஆக்குவதே அவர்களின் நோக்கமாகும்.

தாக்குதல் தொடுக்க இடமளிக்காத வகையில் காஸா - இஸ்ரேல் எல்லையில் யுத்த சூனிய பிரதேசமொன்றினை உருவாக்குவது மற்றும் அந்த பிரதேசத்தை ஆக்கிரமிப்பது என்பன இப்போதைய இஸ்ரேலின் திட்டமாகும்.

இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல் தொடருமானால் யுத்தம் முடிவுக்கு வரும்போது காஸா எனும் சுடுகாடு மாத்திரமே அங்கு எஞ்சியிருக்கும் என்பதே இப்போதைக்கு நிதர்சனமான உண்மை.

Post a Comment

0 Comments