காஸாவில் கொத்துக் கொத்தாக குவியும் ஜனாஸாக்கல்!
காஸாவில் கொத்துக் கொத்தாக குவியும் ஜனாஸாக்கல்! |
காஸா - இஸ்ரேல் போர் 29 நாட்களாக தொடர்கின்ற நிலையில் இரு தரப்பிலுமாக 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி அதிகாலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்தது.
ராக்கெடகள் ஏவப்பட்டன. ஹமாஸ் ஆயுததாரிகள் சுற்றுச்சுவர் வேலியை தகர்த்து தெற்கு இஸ்ரேலுக்குள் கடல் வழியாகவும் பாராகிளைடர் களைப் பயன்படுத்தி திடீர் தாக்குதலை நடத்தினர்.
இஸ்ரேலின் அயன் டோம் செயலிழந்தது. மற்றும் பாலஸ்தீனிய போராளிகள் அருகிலுள்ள நகரங்களுக்கு நுழைந்தனர்.
இசை விழாவில் பல ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களை நோக்கி நூற்றுக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடுத்தனர்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள், பொதுமக்கள் மற்றும் இராணுவ நிலைகளில் இருந்தவர்கள்.
அவர்களில் 200க்கும் அதிகமானவர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் மொஸாட் கூட அறியாத இந்த தாக்குதல், வரலாற்றில் இஸ்ரேல் சந்தித்த மிக மோசமான தாக்குதல்.
தாக்குதலுக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸூடன் போரை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் "முன் ஒருபோதும் இல்லாத விலையைக் கொடுக்கும்" என்று சபதமிட்டார்.
இதற்குப் பழிவாங்கும் வகையில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 10,000 க்கும் அதிகமானோர் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவில் கொத்துக் கொத்தாக குவியும் ஜனாஸாக்கல்! |
காஸா யுத்தம் அதன் "இரண்டாம் கட்டத்திற்கு" நுழைந்துள்ளதாகவும், தரைவழி தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும் அதே நேரத்தில் இஸ்ரேலியர்களை ஒரு நீண்ட போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கேட்டுள்ளார்.
காஸாவிற்கான மனிதாபிமான அணுகல் தடைப்பட்டுள்ளமை சர்வதேச சமூகத்தின் "பாரிய தோல்வி" என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
காஸாவின் மொத்த தகவல் தொடர்பும் முடக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து காஸாவில் எந்தவொரு கட்டிடமும், இடமும் பாதுகாப்பில்லை என்ற நிலையே தொடர்ந்து வருகிறது.
காஸாவில் இஸ்ரேல் கடந்த நான்கு வார காலமாக மேற்கொள்ளும் பயங்கர தாக்குதல்கள் காரணமாக அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி வருவதுடன் இலட்சக்கணக்கானோர் படுகாயமடைந்தும் வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் 4500க்கும் அதிகமானோர் சிறுவர்களும் குழந்தைகளுமாவர். இதற்கப்பால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் 5000 பேரை விட அதிகமானோரை மீட்க முடியாது என மீட்புப் பணியாளர்கள் கைவிரித்துள்ளனர்.
இஸ்ரேல் தன்னிடமுள்ள எப் - 161 என்ற அதிநவீன விமானங்களையும், பால்டிக் ஏவுகணைகளையும் பயன்படுத்தி கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி கட்டிடங்களை அழித்தும், மக்களை கொன்று குவித்தும் கோரத்தாண்டவமாடி வருகிறது.
காஸாவில் ஹமாஸூக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடர்ந்து வரும் தாக்குதல்கள் அந்த பூமியை மயான பூமியாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இது தற்போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டுக்களாகும்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, யுத்த நிறுத்தத்துக்கும் இடமில்லை, தாக்குதல்களை நிறுத்தப்போவதுமில்லை என்றும் சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் யுத்த தாங்கிகளும் காஸா எல்லைக்குள் ஊடுருவியுள்ளதுடன் வைத்தியசாலைகள், அகதி முகாம்கள் என்று அனைத்தையும் அழித்து வருகின்றது.
இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள மனித அவலங்கள் இந்த நூற்றாண்டில் எந்த சக்தியாலும் இதுவரை ஏற்படுத்தப்படாத ஒன்றாகும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வர்ணித்துள்ளன.
மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள காஸாவில் இஸ்ரேல் இராணுவம் செயற்கை ஒளியைப் பாய்ச்சி இரவு பகலாக தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸாவில் உள்ள பெரிய முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதனால் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் குறைந்தது 145 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே தாக்குதல்கள் மாதக்கணக்கில் தொடரும் என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல் ஒரு புறம் வான் தாக்குதல்கள் மறுபுறம் தரைப்படைகள் பல திசைகளில் இருந்து தொடர்ந்து முன்னேறி, காசா பகுதியின் அதிக மக்கள் தொகை கொண்ட சில பகுதிகளை அழித்து வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருப்பதாக கூறப்படும் ‘கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்களை விமானக் குண்டு வீச்சு மூலம் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன்’ 20க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாக தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை டாங்கிகள், பீரங்கிகள் சகிதம் நிறுத்தி உள்ளது.
ஹமாஸின் இராணுவ பிரிவில் சுமார் 25,000 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவ்வமைப்பு காஸா முழுவதும் நிலத்தடி சுரங்கப்பாதைகளினாலான வலையமைப்பையும் கொண்டுள்ளது.
மேலும் காஸா நகரில் உள்ள அல்-குத்ஸ் வைத்தியசாலையைச் சுற்றி கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல வாரங்கள் எகிப்துடன் நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளின் விளைவாக ரஃபா கடவை திறக்கப்பட்டது.
இதனையடுத்து பாலஸ்தீனர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் காஸாவை விட்டு வெளியேறினர்.
இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் எகிப்து இடையே கட்டார் ஏற்படுத்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காயமடைந்த 76 பலஸ்தீனியர்களும் வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருந்த சுமார் 335 பேரும் ரஃபா வழியாக காஸாவை விட்டு வெளியேறி எகிப்தைச் சென்றடைந்தனர்.
ஆனால் காஸாவிற்குள் குறைந்த எண்ணிக்கையிலான உதவி டிரக்குகளை அனுமதிக்கும் வகையில் அண்மையில் இது ஓரளவு திறக்கப்பட்டது. ,
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் எகிப்து எல்லைகளை மூடியதன் காரணமாக 2.2 மில்லியன் மக்களுக்குத் தேவையான பொருட்களில் ஒரு பகுதியே காசாவை அடைந்துள்ளதாக உதவிப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
உலக உணவுத் திட்டம் (WFP) உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக காஸாவின் நிலைமையை "பேரழிவு" என்று விவரித்துள்ளது.
அவசர உதவிகளை இப் பிரதேசத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பெண் ஒருவர் குறுக்கிட்டு காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கோரியதை அடுத்து, பைடன் 'மனிதாபிமான இடை நிறுத்தத்திற்கு' அழைப்பு விடுப்பதாக பதிலளித்தார்.
இடைநிறுத்தம் என்றால் கைதிகளை வெளியேற்றுவதற்கு நேரம் கொடுங்கள்” என்றார்.
பின்னர் வெள்ளை மாளிகை அவர் கூறியது, பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றையே குறிக்கிறது என்று தெளிவுபடுத்தியது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலகின் பல நாடுகள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again