தாயொருவரை கடத்திச் சென்று பாலியல் குற்றம் புரிந்த மூன்று நபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.
42 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றில் வைத்து பாலியல் குற்றம் புரிந்த மூன்று நபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்தியார் ஒருவரின் வீட்டில் தொழில் புரியும் பெண்ணொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார்
கட்டுகஸ் தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப் பெண் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் மாலை வேளையில் வைத்தியரின் வீட்டில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஜன சந்தடி அற்ற பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த மூவர் திடீர் என தன்னை பலவந்தமாக இழுத்து முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் நேற்று பொலிசார் கண்டி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again