Bee Honey Harvesting தேன் எடுக்கும் முறை
தேன் எடுக்கும் முறை
தேன் எடுப்பதற்கு முன்பு முகக்கவசம், கையுறை சாதனங்கள் அணிந்து கொள்ள வேண்டும். மின்னும், கண்ணை உறுத்தும் ஆடைகள், வாசனை திரவியங்கள் தவிர்க்க வேண்டும். உள்ளே புகையை செலுத்தினால் தேனீக்கள் மயக்கநிலை அடையும், தேனீக்களுக்கு ஒரு வகையான எரிச்சல் ஏற்படும். அந்த நேரத்தில் கொட்டாது.
தேனீப் பெட்டியின் மேல் புகைத் தட்டு உள்ளது. அதன் துவாரத்தின் வழியாக புகையிடவேண்டும்.
பின்னர் வைக்கப்பட்டுள்ள 8 சட்டங்களையும் தனித்தனியாக வெளியே எடுத்து, அதில் ஆங்காங்கே தேனீக்கள் இருக்கும். அவைகளை துரத்திவிட்டு, வதையிலுள்ள தேனை, அது சேதமாகாத வகையில் எடுக்கவேண்டும்.
சட்டங்கள் நிறை வதை கட்டப்பட்டு உள்ளே தேன் வைக்கப்பட்டு மெழுகை வைத்து மூடப்பட்டிருக்கும். வதையின் மூடியான மெழுகை கத்தி வைத்து அற்ற வேண்டும்.
தேன் எடுக்கும் இயந்திரம் உள்ளது. அதற்குள்ளே தேன் வதைச் சந்ட்டங்களை வைத்து சுற்ற வேண்டும் சுற்றுவதற்கான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றும்போது வதையில் உள்ள தேன் இயந்திரத்தின் அடிப்பகுதிக்கு வந்துவிடும்.
பின்னர் இயந்திரத்தின் அடிப்பகுயில் உள்ள தேனை வெளியில் எடுப்பதற்கான ஒரு அமைப்பு உள்ளது. அதன் வழியாக தேனை போத்தலில் எடுக்கமுடியும்.
எடுத்த தேனை வடிகட்டினால் விற்பனைக்கு தயார்.
தேன்
தேனீக்களால் உட்கொள்ளப்படும் அமிர்தம் தேனீக்களின் இரைப்பையில் சமிபாடடைந்து தேன் உருவாகின்றது.
தேன் சுவைமிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான உணவு ஒன்றாகும்.
தேன், நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.
தேனில் குறைந்தளவு சீனி காணப்படுவதனால் இது குழந்தைகளுக்கும் நோயாளிகள் மற்றும் அதிகளவு வேலை செய்யும் தொழிலாளிகளுக்கும் தேவையான சக்தியை பெற்றுக் கொடுக்கும் சிறந்ததொரு உணவாகும்.
பல்வேறுபட்ட உணவு வகைகள், பானங்களை சுவையூட்டவும், உணவு வகைகளை நீண்டகாலம் வைத்திருப்பதற்கும் தேன் பயன்படுத்தப்படுகின்றது.
உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்கள், எரிகாயங்கள், நாட்பட்ட காயங்கள் மற்றும் தோலில் ஏற்படும் சிராய்ப்புகள், தொண்டையில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றிற்கு தேன் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் ஆயுர்வேத மருத்துவத்துறையில் மருந்து உற்பத்தியில் தேன் பரவலாக பயன்படுத்தப்படும் மூலப்பொருள் ஒன்றாகும்.
0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again