Header Ads Widget

Responsive Advertisement

icc word cup 2023: இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

icc word cup 2023: இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது 

icc word cup 2023: இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது
icc word cup 2023: இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது 

icc word cup 2023: இந்தியா, மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை (15) நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில்  70 ஓட்டங்களால் வெற்றிபெற்று இந்தியா அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

icc word cup 2023 பருவகால உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 397 ஓட்டங்கைளப் பெற்றது.

icc word cup உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி ஒன்றில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும்  இதுவாகும்.

இந்தியா அணி சார்பாக, துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றதுடன் இந்தியாவின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 397ஆக உயர்த்துவதற்கும் பலம் சேர்த்தனர்.

இந்திாய அணி சார்பாக ஆரம்பத் குடுப்பாட்ட வீரர்களா களம் இறங்கிய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும்  ஷுப்மான் கில் 50 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத் துடுப்பாட்டத்தை ஏற்படுத்தினர்.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 47 ஓட்டங்களைப் பெற்று போது முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

இரண்டாவது விக்கட்டுக்காக விளையாட வந்த விராத் கோஹ்லியும் ஷுப்மான் கில்லும்  2ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசைப் பிடிப்புக்குள்ளான கில் 79 ஓட்டங்களுடன் தற்காலிக ஓய்வுபெற்றார்.

அவருடைய இடத்துக்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயருடன் அதே விக்கெட்டில் மேலும் 163 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியா அணியின் மொத்த எண்ணிக்கையை 327 ஓட்டங்களாக இருந்த போது விராத் கோஹ்லி113 பந்துகளை எதிர்கொண்டு  9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்களாக 117 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டம் இழந்தார். 

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 70 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது இரண்டாவது உலகக் கிண்ண சதமாகும்.

உபாதையிலிருந்து மீண்டு வந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஷுப்மான் கில் மேலும் ஒரு ஓட்டத்தைப் பெற்று 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்களாக 80 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 

அவருடன் சேர்ந்து கே. எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூஸிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் டிம் சௌதீ 100 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களை பெற்றுக்கொண்டார்.

போட்டியின் இரண்டாவது பாதியில் 398 ஓட்டங்கள் என்ற கடினமாக வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 327 ஓட்டங்களைப் பெற்று 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நியூஸிலாந்து அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டெவன் கொன்வே, ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இந்தியா அணியின் ஆரம்ப வேகப் பந்து வீச்சாளர் மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தனர்.

இவர்களின் ஆட்டமிழப்பு  நியூஸிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. 

இவர்களின் இடத்தை நிறப்ப வந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் டெரில் மிச்செல் ஆகிய இருவரும் நிதானமான துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

பொறுப்புணர்வுடனும் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.

டெரில் மிச்செல் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்த அடுத்த பந்தில் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 

தொடர்ந்து கேன் வில்லியம்சன் 52 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது பிடியைத் தவறவிட்ட மொஹமத் ஷமி, அவரது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

வில்லியன்சன், டெரில் மிச்செல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 181 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பின்னர், வில்லியம்சனைத் தொடர்ந்து டொம் லெதம் ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டம் இழந்தார். 

நியூஸிலாந்து அணியின் ஓட்ட வேகம் குறைந்து நியூஸிலாந்து அணி பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது.

டெரில் மிச்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் சேர்ந்து மீண்டும் ஓட்டவேகத்தை சற்று உயர்தினர்.

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது க்ளென் பிலிப்ஸ் 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆரம்பத்துடுப்பாட்டவீரராக தொடர்ந்து போராடிய டெரில் மிச்செல் 134 ஓட்டங்களைப் பெற்றபோது சமியின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தனர். 

நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 327 ஓட்டங்களைப் பெற்று 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்தியா அணி சார்பாக பந்துவீச்சில்மொஹமட் ஷமி 57 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை   கைப்பற்றினார். 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற உலக சாதனையையே விராத் கோஹ்லி அப் போட்டியில் நிலைநாட்டினார்.

சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை முறியடித்து, விராத் கோஹ்லி, இந்தப் போட்டியில் சதம் பெற்தனூடாக 50 சதங்கள் என்ற புதிய  சாதனை நிலைநாட்டினார்.

விராத் கோஹ்லி மொத்தமாக 701 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஓர் உலகக் கிண்ண போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையையும் விராத் கோஹ்லி தனதாகக்கிக் கொண்டார்.

தொடந்து, இந்த உலகக் கிண்ண தொடரில் மொஹமட் ஷமி தனது 3 ஆவது 5 விக்கெட் குவியலைப் பெற்றுக்கொண்டார்.

போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திய மொஹமட் ஷமி ஆட்டநாயகன் விருதை  கைப்பற்றினார்.

Post a Comment

0 Comments