Header Ads Widget

Responsive Advertisement

icc world 2023: நெதர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

icc world 2023: நெதர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

icc world 2023: நெதர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

icc world 2023: இந்தியா, பூனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான  போட்டியில் 160 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பாக, பென் ஸ்டோக்ஸ் குவித்த முதலாவது உலகக் கிண்ண சதம், டாவிட் மலான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள், மொயீன் அலி, ஆதில் ரஷித் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகள் இங்கிலாந்து அணிக்யின் வெற்றி பக்கபலமாகின.

icc world 2023: பருவகால உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறுகின்ற நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய இங்கிலாந்து அதனை அதில் வெற்றிபெற்றது.

icc world 2023: பருவகால உலகக் கிண்ணப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றது.

நடப்பு சம்பியன் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்டம் சிறந்த முறையில் அமைந்தது.

முதலாவது விக்கெட்டில் ஜொனி பெயாஸ்டோவுடன் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த டாவிட் மாலன், 2ஆவது விக்கெட்டில் ஜோ ரூட்டுடன் மேலும் 85 ஓட்டங்களைப் பொற்றுக்கொண்டார்.

பெயாஸ்டோவ் (15), ஜோ ரூட் (28) ஆகியோர் ஆட்டம் இழந்த பின்னர்  விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 133 ஆக இருக்கும் போது 2 விக்கெட்கள்.

இங்கிலாந்து அணி 36ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 192 ஓட்டங்களாக இருந்தபோது 6ஆவது விக்கெட் வீழ்த்தபட்டது.

அதன் பின்னர் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை பலமான நிலைக்கு இட்டுச்சென்றனர்.

இங்கிலாந்து அணியின் மத்திய வரிசையில் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் துடுப்பாட்டங்களே 300 ஓட்டங்களைப் பெற உதவியது.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் 74 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 108  ஓட்டங்களைப்  பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார். 

முதல் 50 ஓட்டங்களை 54 பந்துகளில் பெற்ற ஸ்டோக்ஸ், அடுத்த 50 ஓட்டங்களை 20 பந்துகளில் குவித்தமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

நெதர்லாந்து அணியின் சார்ப்பாக பந்து வீசிய பந்து வீச்சார்கள் பாஸ் டி லீட் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏரின் டட் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி நிர்னயித்த 340 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் நெதர்லாந்து அணி சார்பகா டேஜா நிடாமனுரு (41), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (38), வெஸ்லி பரெசி (37) சைப்ரேண்ட் எங்க்ள்ப்ரெச் (33) ஆகிய நாலவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

நெலதர்லாந்து அணி சார்பாக ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் பாஸ் டி லீட் மாத்திரம் பத்து ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் ஆதில் ரஷித் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  மொயீன் அலி 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டேவிட் வில்லி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி icc world 2023: பருவகால உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாவது ஆறுதல் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றியுடன் அணிகளின் புள்ளிவிபரப் பட்டியல் நிலையில் 4 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி சற்று அதிகரித்துக் கொண்டுள்ளது. 

அவர்கள் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் விளையாட தகுதி பொறுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம் 

போட்டியில் தனது திறமையை வெளிக்காட்டிய பென் ஸ்டோக்ஸ். ஆட்டநாயகன் விருதை தன்வசப்படுத்தினார்.


Post a Comment

0 Comments