icc world cup 2023: அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக இறுதிப் போட்டியில்!
icc world cup 2023: அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக இறுதிப் போட்டியில்! |
icc world cup 2023: இந்தியா, கொல்கத்தா, ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 3 விக்கெட்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றியீட்டி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
icc world cup 2023: உலகக் கிண்ண இறுதிப் போட்டி அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
icc world cup 2023: உலகக் கிண்ண சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான இந்தியாவை எதிர்த்தாட உள்ளது.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
டேவிட் மில்லர் சதம் தென் ஆபிரிக்கா அணியை பலமான நிலைக்கு இட்டுச்சென்றது.
உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் படு மேசமாக அமைந்தது.
12ஆவது ஓவரில் தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஹென்றி க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
க்ளாசனின் ஆட்டமிப்பைத் தொடர்ந்து மீண்டும் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ ஆரம்பித்தன.
எனினும் டேவிட் மில்லர் தனித்து போராடி அபார சதம் குவித்து 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.
116 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.
அவுஸ்திரேலியா அணி சார்பாக, பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தென் ஆபிரிக்கா அணி மொத்தமாக 213 ஓட்டங்கள் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அவுஸ்திரேலியா அணி சார்பாக, டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 37 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
டேவிட் வோர்னர் (29), மிச்செல் மார்ஷ் (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தது அவுஸ்திரேலியாவுக்கு பேரிடியைக் கொடுத்தது.
தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ட்ரவிஸ் ஹெட் 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
பின்னர் ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடினர்.
இருவரும் இணைந்து அவுஸ்திரேலியா அணியின் எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தியபோது லபுஷேன் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதிரடி ஆட்ட நாயகன் க்லென் மெக்ஸ்வெல் ஒரு ஓட்டத்துடன் களம் விட்டகன்றார். இவர் ஆட்டமிழக்கும் போது அவுஸ்திரேலியா அணி 137 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள்.
தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் இங்லிஷ் ஆகிய இருவரும் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு புத்துயிர் கொடுத்தனர்.
ஆயினும், ஸ்டீவன் ஸ்மித் 30 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டம் இழக்க, அவுஸ்திரேலியா மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது.
தொடர்ந்து ஜொஷ் இங்லிஸ், மிச்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெத்தாடி அணிக்கு சிறிய அளவில் உற்சாகத்தைக் கொடுத்தனர்.
இருந்தபோதிலும் இங்லிஸ் 28 ஓட்டங்களுடன் வெளியேற ஆட்டத்தில் மீண்டும் பரப்பரப்ப்பை ஏற்பட்டுத்தியது.
மிச்செல் ஸ்டார்க்கும் பெட் கமின்ஸும் ஆபிரிக்கா அணியினரின் பந்து வீச்சுக்களை பொறுமையுடன் எதிர்கொண்டனர்.
அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட 20 ஓட்டங்களை மிச்செல் ஸ்டார்க்கும் பெட் கமின்ஸும் பெற்றுக்கொடுது அணியை வெற்றிபெறச்செய்தனர்.
மிச்செல் ஸ்டார்க் 16 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
தென் ஆபிரிக்கா மீண்டும் அதிர்ஷ்டமற்ற அணியாக அரை இறுதியுடன் உலகக் கிண்ண 223 போட்யிலிருந்து வெளியேறியது.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் குவின்டன் டி கொக் தவறவிட்ட பிடியும் தென் ஆபிரிக்காவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனலாம்.
பந்துவீச்சில் தப்ரெய்ஸ் ஷம்சி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெரால்ட் கோயெட்ஸீ 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டியில் திறமையை வெளிப்படுத்திய ட்ரவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினர்.
0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again