காஸா மோதல் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும்: நாமல் எம்.பி.
பலஸ்தீன், காஸாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை, இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு பலஸ்தீனத்துடன் நெருக்கமான தொடர்பு உள்ளது.
அவர் இலங்கை - பலஸ்தீன ஒற்றுமை சங்கத்தை ஆரம்பித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரில் வீதியொன்றும் அமைக்கப்பட்டது.
தற்போது பலஸ்தீனத்துடன் மீண்டும் யுத்தம் ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகள் ஏற்பட வாய்பு உள்ளது
இது தொடர்பில் பாராளுமன்றமும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும். இஸ்ரேல் - காஸா மோதல் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன.
யுத்தத்தால் உலகில் ஸ்தீரமற்ற நிலைமை ஏற்படும்.
இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு நிலைமையில் இருந்து மீள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடு என்றவகையில், இதனல் ஏற்படுகின்ற பாதிப்பு தொடர்பில் நாங்கள் நன்கு அனுபவப்பட்டிருக்கிறோம்.
அதனால் மோதலை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again