Gaza war காசா போர்: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு
![]() |
| Gaza war காசா போர்: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு |
Gaza war காசா போர்: கடந்த மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் மும்முனைத் தாக்குதலை 28ஆவது நாளாக தொடர்ந்து கொண்டே வருகிறது.
நாளாந்தம் காஸா பகுதியில் குழந்தைகள், கர்ப்பித்தாய்மார்கள், பெண்கள், இளைஞசர் யுவதிகள் என பல ஆயிரக்கணக்கான உயர்கள் பலியாகிக்கொண்டு வருகின்றன.
அதன் தொர்ச்சியாக தற்போது Gaza war காசா போரில் பலியானோர் எண்ணிக்கை 10,000 யிரத்தையும் தாண்டியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா (Gaza) மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து 28 ஆவது நாளாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஹமாஸ் அமைப்பினரை தான் தாங்கள் தாக்கி அழிக்கின்றோம் என்று கூறி இஸ்ரேல் இரணுவம் வான் வழியாகவும், கடல் வழியாகவும் காசாப் பகுதி மக்கள் மீதும், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பல்லிவாயல்கள், மத்ரஸாக்கள் பொதுச் சந்தைகள் என மக்கள் செரிந்து உள்ள இடங்களை குறிவைத்து குண்டுகளை வீசி தாக்கி வந்த இஸ்ரேல் இராணுவம் கடந்த சில நாட்களாக தரைவழியாகவும் காசாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
Gaza war காசா போர் ஒவ்வெரு நாளும் தீவிரமடைந்து வருகின்றது.
இதன் காரணமாக காசா நகரத்தில் உள்ள வீடுகளும் கட்டிடங்களும், பாடசாலைகளும் மற்றும் பொது இடங்களும் சிதைந்து அழிக்கப்பட்டுக் கொண்டு வருக்கிறது.
இந்நிலையில் காசாப் நகர் பகுதியில் உள்ள முகாம்களில் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தினரின் குண்டு வீச்சில் குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், வயோதிபர்கள் சிறுவர்கள், கற்பினித் தாய்மாகள் உட்பட பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் காசாப் பகுயில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
Gaza war காசா போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரையிலும் காசாவில் 9 ஆயிரத்து 61 பேர் பலியாகி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தனது புள்ளிவிபரங்களை வெயியிட்டிருந்தது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், 3,760 குழந்தைகளும் 2,326 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Gaza war காசா போரில் இதுவரைக்கும் ஆண்கள், பெண்கள், சிறார்கள், குழந்தைகள், முதியவர்கள் என 32ஆயிரத்துக்கும் அதிமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதன் மூலம் Gaza war காசா போரில் பலஸ்தீனர்கள் தரப்பிலும், இஸ்ரேலர்கள் தரப்பிலும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,000 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்க கவலைக்குரிய விடையமாகும்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again