Header Ads Widget

Responsive Advertisement

budget 2024: வரவு - செலவுத்திட்டம் 2024 நாளை பாராளுமன்றில்!

வரவு - செலவுத்திட்டம் 2024 நாளை பாராளுமன்றில்!

budget 2024: வரவு - செலவுத்திட்டம் 2024 நாளை பாராளுமன்றில்!
budget 2024: வரவு - செலவுத்திட்டம் 2024 நாளை பாராளுமன்றில்!

budget 2024: பலராலும் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள வரவு - செலவுத்திட்டம் (budget 2024) நாளை (13) திங்கட் கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ள ஒதுக்கீடுகள் தொடர்பாக பல பாராளுமன்ற அரசியல் பிரதிநிதிகளும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழ்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்களின் காத்திரமான கருத்துக்களை வெயிட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத்திட்டம் 2024 தமக்கு பெருமளவுக்கு எதிர்பார்ப்புக்கள் எவையும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின்  பாராளுமன்ற பிரதிநிதிகள் பாதுகாப்பு தொடர்பான விடையங்களுக்கு அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்தாக தொரிவித்துள்ளனர்.

கடந்தகாலங்களில் விடப்பட்ட குறைபாடுகள் தொடர்ந்து இம்முறையும் எவ்வித மாற்றங்களும் இன்றிக் காணப்படுவதாக தங்களின் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

budget 2024: எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை திங்கட் கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்திருக்கும் அதேவேளை விரிவாக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டு அமைவாக அமைக்கப்ப வேண்டும்.

விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும் பூர்த்திசெய்யவேண்டிய தேவையிருப்பதால் இம்முறை வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

எதிர்பார்ப்புகள் நிரைந்த இவ்வாறானதொரு பின்னணியில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் 15ஆம் திகதி (நாளை) ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரையயைத் தொடரந்து இது தெடர்பான நிலைப்பாட்டைக் கூறமுடியும். 

இருப்பினும் கடந்தகால வரவு - செலவுத்திட்டங்கள் தொடர்பில் தாம் சுட்டிக்காட்டிவந்த குறைபாடுகள் இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்திலும் காணப்படுகின்றது.

வழமைபோன்று இம்முறையும் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கான நிதியொதுக்கீட்டை விட பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 

அது மட்டுமல்லாது, கடந்த காலங்களை விட இம்முறை வரவு செலவுத்திட்டதில் புதிதாக ஜனாதிபதி செயலகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பட்டுள்ளதாவும் கூறிய அவர், இதுகுறித்து தான் அதிருப்தியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரவு - செலவுத்திட்டம் 2024 பற்றி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளிட்ட கருத்து பின்வருமாரு அமைந்திருந்தது.

அண்மைக் காலங்களில் நாடுட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்களின் அடிப்படைப் பொருளாதாரப்  பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அமையாது. 

தாம் எதிர்பார்க்கும் அளவுக்கு எநத்தவித விசேட சிறப்புகளும் இல்லை. அதை தாம் எதிர்பார்க்கவில்லை எனவு அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக வரவு செலவுத்திட்டம் என்பது பொருளாதாரத்தை மாத்திரம் மையப்படுத்தியது அல்ல. 

மாறாக அது ஒட்டுமொத்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டது என சுட்டிக்காட்டிய அவர்,

நாட்டில் மேலும் பல பிரச்சினைகள் நிலவுகின்ற வேளையில் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்குவதில் அர்த்தமில்லை என விசனம் வெளியிட்டார்.

budget 2024: மேலும் வரவு - செலவுத்திட்டம் 2024 பற்றி கருத்துரைத்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்வருமாறு தெரிவித்தார்.

அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தை அடிப்படையாகக்கொண்டு கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்வதெனில் நாம் இந்த வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவேண்டும். 

இருப்பினும் தேசிய ரீதியில் நோக்குகையில் முதலில் வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னரே அதுகுறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும்' என்றார். 

இருந்தபொதிலும் நாட்டின் எதிர்கால வரவு - சேலவுத்திட்டம் எதிர்வரும் வருடத்துக்கான நிதிக் கொள்கைத் திட்டம்.  அந்த திட்டத்தினூடாக ஊடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்  பல வரப்பிரசாதங்கள் அரச ஊழியர்களுக்கு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்து. 

budget 2024: அதேவேளை, குறிப்பாக வரி அதிகரிப்பு 03 வீத வரி அதிகரிப்பு இந்த வரவு - செலவுத்திட்டதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகல்கல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments