போலி கடவுச் சீட்டில் பெண்ணை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற நபர் கைது!
![]() |
| போலி கடவுச் சீட்டில் பெண்ணை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற நபர் கைது! |
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளார். இவர் வரும்போது இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச் சீட்டை கொண்டு வந்து, போலியாக மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், தனது ஐந்து வயது மகன், மற்றும் அவரது மனைவி எனக் கூறிக் கொண்டு இத்தாலி நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கா தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்ற குறித்த பெண் 29 வயதுடைய காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்தவர் என விமான நிலைய குடிவரவு குரயகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இத்தாலி செல்வதற்காக நேற்றையதினம் மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இவர்கள் பணிக்கவிருந்த விமானம் 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடர இருந்தது.
இதற்கு மூன்று மணித்தியாளங்களுக்கு முன்னர் வருகை தந்த சந்தேக நபரும் அவருடன் அழைத்து வரப்பட்ட இருவருமாக மூவரும் வழமையான குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அவர்கள் கொண்டு வந்த ஆவணகளை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் தமது பயண ஆவணங்களை கொடுத்துள்ளனர்.
இவர்கள் கொண்டு வந்த ஆவணங்கள் மற்றும் அவரிகளின் கடவுச் சீட்டின் நம்பகத்தன்மை குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு சந்தேகம் எழத் தொடங்கின.
அதிகாரிகளுக்கு எழுந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக, அவர்கள் மூவரும் எல்லை ஆய்வுப பிரிவிடம் பரிந்துரைக்கப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின்போது, திருக்கிடும் உண்மைகள் வெளியாகின.
குறித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர் அழைத்து வந்த சிறு குழந்தை சந்தேக நபருயது என்றும், மனைவி என்று அழைத்து வந்த அத்தப் பெண் அவருடைய மனைவி இல்லை என்றும் குறித்த சோதனைகளின் போது கண்டரியப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அழைத்து வந்த பெண் அவரது குடும்பமும் இல்லை, குழந்தையின் தாயும் இல்லை. குறித்த பெண் 29 வயதுடைய காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
சந்தேக நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த போது இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச் சீட்டை தன்னுடன் கொண்டு வந்துள்ளார்.
அந்த கடவுச் சீட்டில் அருடன் அவர் மனைவியும் இத்தாலியிருந்து வந்தது போன்று குடிவரவு குடியகள்வு அதிகாரிகளின் முத்திரையை போலியாக தயாரித்து அச்சிட்டுள்ளார்.
அதன் பின்னர் அந்த கடவுச் சீட்டில் வேற ஒரு பெண்ணை தனது மனைவி என்று போலியாக அச்சிடப்பட்ட கடவுச் சீட்டை காட்டி அழைத்துச் செல்வதற்காக வந்தபோது இவர் கைது செய்யப்பட்டடார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து, அதைப் போலியாக பயன்படுத்தியதாகவும் குறித் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் இது போன்று மனைவியின் கடவுச் சீட்டை பயன்படுத்தி ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
அதன்படி, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினரால் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again