Header Ads Widget

Responsive Advertisement

காசாவிருந்துகொண்டு நடப்புகளைப் பதிவு செய்ய கனடா பிரஜை தீர்மானம்

காசாவிருந்துகொண்டு நடப்புகளைப் பதிவு செய்ய கனடா பிரஜை தீர்மானம்

காசாவிருந்துகொண்டு நடப்புகளைப் பதிவு செய்ய கனடா பிரஜை தீர்மானம்
காசாவிருந்துகொண்டு நடப்புகளைப் பதிவு செய்ய கனடா பிரஜை தீர்மானம்

காசா - இஸ்ரேல் போர் 32 ஆவது நாளாக தொடர்ந்த நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

யுத்த நிறுத்தத்துக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை காசாப் பகுதியல் நடத்தி வருகின்றது.

நிலையில் இரு தரப்பிலுமாக 12ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி அதிகாலையில்  ஹமாஸ் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட காசா - இஸ்ரேல் போர் ஒரு மாதம் கடந்தும் ஓயாமல் மென்மேலும் பல மடங்கு பலமடைந்து வருகின்றது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் "முன் ஒருபோதும் இல்லாத விலைவுகளை சந்திக்க நேரிடும்" என்று சபதமிட்டிருந்தார்.

காசா - இஸரேல் யுத்தம் அதன் "இரண்டாம் கட்டத்திற்கு" நுழைந்துள்ளதாகவும், தரைவழி தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும் அதே நேரத்தில் இஸ்ரேலியர்களை ஒரு நீண்ட போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கேட்டுள்ளார்.

காசாவின் அனைத்து தகவல் தொடர்பும்  முடக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து காசாவில்  எந்தவொரு கட்டிடமும், இடமும் பாதுகாப்பில்லை என்ற நிலையே தொடர்ந்து வருகிறது.

காசாவில் இஸ்ரேல் கடந்த ஐந்து வாரங்களாக மேற்கொள்ளும் பயங்கர தாக்குதல்கள் காரணமாக அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி வருவதுடன் இலட்சக்கணக்கானோர் படுகாயமடைந்தும் வருகின்றனர். 

உயிரிழந்தவர்களில் 4500க்கும் அதிகமானோர் சிறுவர்களும் குழந்தைகளுமாவர்.  

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் 5000 பேரை விட அதிகமானோரை மீட்க முடியாது என மீட்புப் பணியாளர்கள் கைவிரித்துள்ளனர்.

இந்நிலையில், காசாவின் துயரங்களை பதிவு செய்வதற்காக அங்கேயே தங்கியிருந்து  காட்சிகளை பதிவுசெய்து வெளி உலகுக்கு காட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் கனடா பிரஜையான மன்சூர் சூமன் காசாவிலேயே தங்கியிருக்க தீர்மானமானித்துள்ளார். 

இது தொடர்பாக கூறுகையில் இது ஒரு மனிதாபிமான கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

காசாவில் உள்ள மக்கள் காசா பகுதியிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளார்.

அதேவேளை தனது குடும்பத்தினரை அங்கிருந்து அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.

மேலும் அவர் காசாவில் தங்கியிருந்து அங்கு நடப்பவற்றை பதிவு செய்யவேண்டியது எனது கடமை என கருதுகின்றேன் என கனடாவை சேர்ந்த மன்சூர் சூமன் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவியையும் ஐந்து பிள்ளைகளையும் எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளார்.

தொடர்ந்தும் காசாவில் தங்கியிருக்கவேண்டிய கடப்பாடு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2.3 மில்லியன் மக்களின் துயரம் முடிவுக்குக் கொண்டு வரும் வரையில் காசாவிலேயே தங்கியிருந்து, அங்கு என்ன நடக்கின்றது என்ற உண்மையை  வெளி உலகிற்கு தெரிவிப்பது எனது மத மனிதாபிமான கடப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர், என்னால் ஆங்கிலத்தில் உரையாட முடியும் நான் மேற்குலகில் வாழ்ந்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஜெரூசலேத்தை சேர்ந்தவர் இரண்டு வருடங்களிற்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குடியேற தீர்மானித்தார்.

காசா எனது மனைவியின் பூர்வீகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களின் பிள்ளைகள் தனது பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே அவர் இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறியுள்ளார். 

நாங்கள் இங்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தோம் எனது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைக்கு சென்றார்கள்.

நானும் மனைவியும் இங்கு தொழில்புரிகின்றோம்.

நண்பர்கள் உறவினர்கள் உள்ளனர்.

எங்களின் பிரதேசத்தில் உள்ள  பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்லாமியர்களுக்கு புனிதம் நிறைந்த இடம்.

ஆனால் நாங்கள் யுத்தத்தின் பிடியில் சிக்குவோம் என எதிர்பார்க்கவில்லை எனதெரிவிக்கும் அவர் தான் வசிக்கும் கான்யூனிசில் ஒரு சிறிய மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்.

பிரசவ விடுதிக்கு அருகில் உள்ள சிறிய அறையில் அவர் உறங்குகின்றார்.

எப்போதெல்லாம் குழந்தையொன்று பிறக்கின்றதோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியான செய்தியை நான் செவிமடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments