மெக்ஸ்வெல் அதிரடியால் ஆப்கானை வீழ்த்திய அவுஸ்திரேலியா!
![]() |
மெக்ஸ்வெல் அதிரடியால் ஆப்கானை வீழ்த்திய அவுஸ்திரேலியா! |
icc world cup 2023: இந்தியா, மும்பை வான்கடே விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் பலத்த சவாலுக்கு மத்தியில் க்ளென் மெக்ஸ்வெல் அதிரடியாக இரட்டைச் சதம் குவித்து அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்ததுடன் அவுஸதிரேலியா அடுத்த சுற்றுக்கு தகுதியும் பெற்றது.
icc world cup 2023: உலகக் கிண்ண அரை இறுதிச் சுற்றில் விளையாடும் தகுதியை 3ஆவது அணியாக அவுஸ்திரேலியா உறுதிதிப்பத்திக்கொண்டது.
இந்த பருவகால உலக்கிண்ண தொடரில் இதுவரை தென் ஆபிரிக்காவும் இந்தியாவும் இறுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் சார்பாக முதலாவது உலகக் கிண்ண சதத்தைக் இப்ராஹிம் சத்ரான் குவித்து வரலாறு படைத்ததார்
icc world cup 2023: உலகக் கிண்ண போட்டித்தொடரில் மெக்ஸ்வெல் பெற்ற இரட்டைச் சதமானது 48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் குவிக்கப்பட்ட முதலாவது இரட்டைச் சதமாகும்.
அதுமட்டடுமல்லாது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மெக்ஸ்வெல் அவுஸ்திரேலியா சார்பாக இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார்.
மெக்ஸ்வெல் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நூர் அஹ்மதின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார்.
ஆனால் மீளாய்வில் அவர் ஆட்டம் இழக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.
தொடரந்தும் அதே ஓவரில் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மெக்ஸ்வெலின் பிடியை முஜீப் உர் ரஹ்மான் தவறிவிட்டார்.
இந்த வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மெக்ஸ்வெல் இறுதியில் பல உலகக்கிண்ண வரலாற்றுகளைப் படைத்தார்.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
icc world cup 2023: அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ஓட்டங்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ஒட்டத்துடனும், ரஷித் கான் 35 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 292 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது.
ஆப்கான் அணி சார்பாக இப்ராஹிம் ஸத்ரான் துடுப்பெடுத்தாடி 143 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 129 ஓட்டங்களைக் குவித்தார்.
இரண்டாவது விக்கெட்டில் ரஹ்மத் ஷாவுடன் 83 ஓட்டங்களைப் பகிர்ந்த ஸத்ரான், 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 52 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் ரஷித் கானுடன் 58 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 291 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
அவுஸ்திரேலியாவின் ஆரம்ப துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. 19ஆவது ஓவரில் 91 ஓட்டங்களாகளுக்கு 7 விக்கெட் வீழ்த்தப்பட்டது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றொரு தலைகீழ் வெற்றியை ஈட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
அனைவரது எதிர்பார்ப்பனையும் தவிடு பொடியாக்கிய மெக்ஸ்வெல் 128 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 201 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவுக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.
அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது மெக்ஸ்வெலின் இரட்டைச் சதத்திற்கும் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அவர் வெற்றி ஓட்டங்களையும் இரட்டைச் சதத்தையும் சிக்ஸ் மூலம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மெக்ஸ்வெல் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் பெட் கமின்ஸுடன் சாதனை மிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஆனால், பெட் கமின்ஸின் பங்களிப்பு வெறும் 12 ஓட்டங்களாக இருந்தது.
நியூஸிலாந்துக்கு எதிராக ஸிம்பாப்வேயின் டேவிட் ஹூட்டன், இயன் புச்சார்ட் ஆகியோர் பகிர்ந்த 117 ஓட்டங்களே இதற்கு முன்னர் உலகக் கிண்ணப் போட்டியில் 8ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
க்ளென் மெக்ஸ்வெல் 147 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது வலதுகாலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது.
இதனால் கடும் வேதனைக்குள்ளான மெக்ஸ்வெல், சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார்.
நின்ற இடத்தில் இருந்தவாறே பவுண்டறிகளையும் சிக்ஸ்களையும் விளாசியமை அற்புதமாக இருந்தது.
அத்துடன் மெக்ஸ்வெலின் விடாமுயற்சி ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.
பந்துவீச்சில் ரஷீத் கான் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அவஸ்திரேலியாவும் தென் ஆபிரிக்காவும் கொல்கொத்தாவில் நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
போட்டியில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய க்ளென் மெக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை தன்வசப்படுத்தினார்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again