Header Ads Widget

Responsive Advertisement

icc world cup 2023: இந்தியா 302 ஓட்டங்களால் அபார வெற்றி!

icc world cup 2023: இந்தியா 302 ஓட்டங்களால் அபார வெற்றி!

icc world cup 2023: இந்தியா 302 ஓட்டங்களால் அபார வெற்றி!
icc world cup 2023: இந்தியா 302 ஓட்டங்களால் அபார வெற்றி!

உலகக் கிண்ணம் 20203 (icc world cup 2023) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நடைபெற்ற 33ஆவது லீக் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மேதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இந்திய அணி 302 ஓட்டங்களால் அபார வெற்றிப் பெற்று சாதனை படைத்தது.  

உலகக் கிண்ண வரலாற்றில் ஈட்டப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

icc world cup 2023: போட்டியில் 7 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்ற இந்தியா, முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது.

இந்திய அணியின் சார்பில் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 357 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாவது பந்தில் பவுண்டறி அடித்து இந்தியா அணியின்  ஆட்டத்தை ஆரம்பித்தார் ரோஹித் ஷர்மா.

ஆனால், இரண்டாவது பந்தில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்த டில்ஷான் மதுஷன்க உரிய பதிலடி கொடுத்தார். (4 - 1 விக்.)

ஷுப்மான் கில்லும் விராத் கோஹ்லியும் ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடி பின்னர் வேகத்தை அதிகரித்தனர்.

92 பந்துகளை எதிர்கொண்ட கில் 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 92 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது டில்ஷான் மதுஷானின் பந்து வீச்சில குசல் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (193 - 2 விக்.)

மேலும், டில்ஷான் மதுஷன்கவின் பந்துவீச்சில் விராத் கோஹ்லி பெத்தும் நிஸ்ஸன்கவிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

94 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 11 பவுண்டறிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்  ஜோடி ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.

பின்னர், ராகுல் 21 ஓட்டங்களுடன் துஷ்மன்த சமீரவின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்தவிடம் பிடிகொடுத்த ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது டில்ஷான் மதுஷன்கவின் பந்துவீச்சில் குசல் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயரும் ரவிந்தர ஜடேஜாவும் இணைந்து 6ஆவது விக்கெட்டில் 36 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மதுஷானின் பந்துவீச்சில் தீக்ஷனவிடம் பிடிகொடுத்த ஐயர் ஆட்டம் இழந்தார்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஷ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 82 ஓட்டங்களைப் பெற்றார். 

ஷமி 2 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்கள்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இது பதிவானது.

அதன்படி, 358 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பும்ராவின் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்தார்.

அடுத்த ஓவரில் மொஹமத் சிராஜ் வீசிய முதலாவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் திமுத் கருணாரட்ன ஆட்டம் இழந்தார்.

சிராஜின் அதே ஒவரில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் பிடிகொடுத்த சதீர சமரவிக்ரமவும்  ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (2 - 3 விக்.)

முதல் இரண்டு ஓட்டங்கள் வைட்கள் மூலம் கிடைத்ததுடன் 3ஆவது ஓவரிலேயே குசல் மெண்டிஸ் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.

இலங்கையின் ஆரம்பம் எந்தவகையிலும் சிறப்பாக அமையவில்லை.

கசுன் ராஜித்த 14 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 12 ஓட்டங்களையும் மற்றும் மஹீஸ் தீக்‌ஷன 12 ஓட்டங்களையும்பெற்றுக் கொண்டனர்.

ஏனைய அனைத்து வீரர்களும் 10 ஐ விட குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 5 வீரர்கள் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை.

தொடர்ந்து ஜஸ்ப்ரிட் பும்ராவும் மொஹமத் சிராஜும் மிகத் துல்லியமாக பந்துவீசி சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவருக்கும் நெருக்கடியைக் கொடுத்தனர். 

பல தடவைகள் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் பந்துகளை கணிக்க முடியாமல் தடுமாறினர்.

மொஹமத் ஷமி தனது முதலாவது ஓவரின் 3ஆவது பந்தில் சரித் அசலன்கவை (01) ஆட்டம் இழக்கச்செய்தார். ஷமியின் அடுத்த பந்தில் விக்கெட் காப்பாளர் கே. எல். ராகுலிடம் பிடிகொடுத்த துஷான் ஹேமன்த ஓட்டம் பெறாமல் களம் விட்டு வெளியேறினார். 

தொடர்ந்து மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் ராகுலிடம் பிடிகொடுத்த துஷ்மன்த சமீரவும் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (22 - 7 விக்.)

இரண்டு ஓவர்கள் கழித்து மொஹமத் ஷமியினால் மெத்யூஸ் (12) போல்ட் செய்யப்பட்டார். (29 - 8 விக்.)

9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த மஹீஷ் தீக்ஷனவும் கசுன் ராஜித்தவும்  பகிர்ந்த 20 ஓட்டங்களே இலங்கை இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

மொத்த எண்ணிக்கை 49 ஓட்டங்களாக இருந்தபோது ஷமி வீசிய பந்தை அடிக்க முயற்சித்த கசுன் ராஜித்த ஸ்லிப் நிலையில் ஷுப்மான் கில்லிடம் பிடிகொடுத்து 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (49 - 9 விக்.)

டில்ஷான் மதுஷன்க, ரவிந்த்ர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் பிடிகொடுத்து 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 

மஹீஷ் தீக்ஷன 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மொஹமத் ஷமி 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். 

icc world cup 2023: போட்டியிலும் இது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக பதிவானது.

மொஹமத் சிராஜ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மொஹமத் ஷமி. ஆட்டநாயகன் விருதை கைப்பற்றிக்கொண்டார்.

Post a Comment

0 Comments