Header Ads Widget

Responsive Advertisement

icc world cup 2023: அவுஸ்திரேலியா 33 ஓட்டங்களால் வெற்றி!

icc world cup 2023: அவுஸ்திரேலியா 33 ஓட்டங்களால் வெற்றி!

icc world cup 2023: அவுஸ்திரேலியா 33 ஓட்டங்களால் வெற்றி!
icc world cup 2023: அவுஸ்திரேலியா 33 ஓட்டங்களால் வெற்றி!

icc world cup 2023: இந்தியா, அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 பருவகால 36ஆவது லீக் போட்டி (04) சனிக்கிழமை நடைபெற்றது. இதந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்தாடின. 

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி, 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று தனது அரை இறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை அதிகரித்தள்ளது.

icc world cup 2023: பருவகால உலகக் கிண்ணப் போட்டியில், இங்கிலாந்து அணியை போட்டிகளிலிருந்து வெளியேற்றிய அவுஸ்திரேலியா, அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.

icc world cup 2023 போட்டியில் இருந்து வெளியேறும் இங்கிலாந்துக்கு, பாகிஸ்தானில் 2025இல் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் மத்திய வரிசை வீரர்களின் சிறந்த பங்களிப்புடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான ட்ரவிஸ் ஹெட் (11), டேவிட் வோர்னர் (15) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்ததால்  38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலை தடுமாற்றமைடந்தது அவுஸ்திரேலியா அணி. 

தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டெடுத்தனர்.

ஸ்டீவன் ஸ்மித் 44 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய மானுஸ் லபுஷேன் 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 178 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள். என்றிருந்த போது, அவுஸ்திரேலியா அணி 220 ஓட்டங்களை பெற்றுகொள்ளும் என கருதப்பட்டது.

ஆனால், மத்திய வரிசை வீரர்கள் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கையை 286 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கெமரன் க்றீன் (47), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (35), அடம் ஸம்பா (29) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் கிறிஸி, வோக்ஸ் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆதில் ரஷித் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 284 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி  48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்திது அணியின் ஆரம்பத் துடுப்பாட்டம் மிக மோசமாக அமைந்தது.

ஜொனி பெயாஸ்டோவ் முதல் பந்திலும், ஜோ ரூட் (13) 5ஆவது ஓவரிலும் ஆட்டம் இழந்தனர்.  19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து தடுமாற்றமடைந்தது.

அதனைத் தொடர்ந்து டாவிட் மலான் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவுக்கு அச்சதம் பெற்றனர்.

3ஆவது விக்கெட்டில் அவர்கள் இருவரும் 84 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டாவிட் மலான் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஒரு ஓட்டத்துடன் களம் ஆட்டம் இழந்தார். 

எனினும் பென் ஸ்டோக்ஸும் மொயீன் அலியும் 5ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். 

அதன் பின்னர விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்து கொண்டிருந்தன.

பென் ஸ்டோக்ஸ் 64 ஓட்டங்களுடனும் மொயீன் அலி 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்து வெளியேரினர்.

மத்திய வரிசையில் கிறிஸ் வோக்ஸ் (32), டேவிட் வில்லி (10), ஆதில் ரஷித் (29) ஆகியோரிள் முயற்சி வீன்போனது.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மத்திய வரிசையில் கிறிஸ் வோக்ஸும் பின்வரிசையில் டேவிட் வில்லி, ஆதில் ரஷித் ஆகியோரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

எனினும் கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாயிற்று.

போட்யில் தனது திறமையை வெளிப்படுத்தியஅடம் ஸம்ப்பா, ஆட்டநாயகன் விருதை தன்வசப்படுத்தினார்.

Post a Comment

0 Comments