Sri lanka cricket board அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்!
![]() |
| Sri lanka cricket board அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்! |
உலகக் கிண்ணம் 2023 தொடரில் இலங்கை இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்று 302 ஓட்டங்களால் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இந்திய அணி 302 ஓட்டங்களால் அபார வெற்றிப் பெற்று சாதனை படைத்தது.
இது குறித்து மோசமான விமர்சனங்கள் பலராலும் தெரிவிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த இலங்கை அணியின் இரசிகர்கள் பாரிய மனவேதனை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசியலிலும் தற்போது குழப்பங்கள் எழுந்துள்ளது.
விலையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட் சபையை கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகயில், Sri lanka cricket board அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்! இல்லையேல் கடுமைாயன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இடம் கொடுக்காமல், Sri lanka cricket board அதிகாரிகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகளுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவும் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தோல்விகளுக்கான பொறுப்பை வீரர்களை விட அதிகாரிகளே ஏற்க வேண்டும் என அமைச்சர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் கிரிக்கெட் தெரிவுக்குழு ஆகிய இரண்டுடிலும் உள்ள அதிகாரிகள் தாங்களாகவே பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
படுதோல்விக்கான விளக்கத்தை கோரியுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட்!
உலகக் கிண்ணம் 2023 போட்டியில் இலங்கை அணியின் படுதோல்வி குறித்து ஸ்ரீலங்கா கிரிகெட் (Sri lanka cricket board) அவசர விளக்கத்தை கோரியுள்ளது.
நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இலங்கை கிரிகெட் அணியின் மேசமான செயற்பாடு குறித்து, அணியின் பயிற்சியாளர்கள், தேர்வாளர்களிடம் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் (Sri lanka cricket board) விளக்கத்தை கோரியுள்ளது.
உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அத்துடன் இந்தியாவுடனான போட்டியில் படுதோல்வியடைந்திருந்தது.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததோடு ஸ்ரீலங்காக கிரிக்கெட் (Sri lanka cricket board) அதிருப்தியடைந்துள்ளது.
இலங்கை கிரிகெட் அணியின் தோல்வியின் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொண்டு அணியின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அவசர விளக்கத்தை கோரியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிகெட் (Sri lanka cricket board) விடுத்துள்ள விளக்க கோரிக்கையில் சில முக்கிய பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
1. போட்டிகளின் போது அணியின் உத்திகள், தயார்படுத்தல்கள் மற்றும் முடிவுகள் குறித்து.
2. ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களின் தேர்வுகளை நியாயப்படுத்துதல் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் குறித்து.
3. போட்டி பகுப்பாய்வுகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் போட்டியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து.
4. வீரர்களின் உடல், உள ரீதியான பிரச்சினைகள் மற்றும் செயல்திறன் குறித்து
போன்ற கோரிக்கைகளுக்கான விளக்கங்களை எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா கிரிகெட் நிறுவனம் (Sri lanka cricket board) குறிப்பிட்டுள்ளது.
****
படுதோல்வி குறித்து அதிருப்யை வெளியிட்டுள்ள வர்ணணையாளர்கள்!
உலக கிண்ணம் 2023 தொடரில் இலங்கைஅணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்தது குறித்து இலங்கையை சேர்ந்த வர்ணணையாளர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் தெறிவித்துள்ளனர்.
நடப்பு உலகக் கிண்ணப் போட்டிகளில் ஏனைய கத்துக்குட்டி அணிகள் பெற்ற மிகக்குறைந்த ஒட்டங்களை விட குறைந்த ஓட்டங்களைப் பெற்றதே மிகவும் கவலைக்குரிய விடயம் என வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை விட தெரிவிப்பதற்கு எதுவுமில்லை சொல்லப்போனால் மிகவும் மறக்க முடியாத நாள் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு உலகக் கிண்ணம் 2023 போட்டிகளில் இலங்கை அணியின் துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு, பிடியெடுப்பு ஆகிய அனைத்திலும் அவர்களின் செயற்பாட்டை பார்த்தபோது மனவேதனையும், கவலையும் காயமும் ஏற்பட்டது என இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பர்விஸ் மஃரூப் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சர்வதேச தரத்தில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து மேலும் தெரிக்கையில், அனைத்து இலங்கை வீரர்களிற்கும் எனது வேண்டுகோள் - இலங்கை நாட்டின் கௌரவத்திற்காகவும் உங்களின் கௌரவத்திற்காகவும் விளையாடுங்கள்.
முடியுமானவரை உங்களது திறமைகளை வெயிப்படுத்துங்கள், மீண்டும் சிறப்பாக விளையாடி சம்பியன்ஸ் கிண்ணத்திற்குதகுதி பெறுங்கள் என அவர் நம்பிக்கையுட்டும் விதமாக வேண்டுகோல் விடுத்துள்ளார்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again