Header Ads Widget

Responsive Advertisement

நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் சடுதியாக நீர் பெருகும் அபாயம்!

நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம்  சடுதியாக நீர் பெருகும் அபாயம்! 

நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம்  சடுதியாக நீர் பெருகும் அபாயம்!
நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம்  சடுதியாக நீர் பெருகும் அபாயம்!

நாட்டில் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. பண்டாரவளை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராவணா நீர்வீழ்ச்சியின் நீர் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பண்டாரவளைப் பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, காட்டு வெள்ளம் வரக்கூடிய சாத்தியப்பாடு உள்ளது.

காட்டுவெள்ளம் காரணமாக நீர்வீழ்ச்சிகளில் வழமைக்கு மாறாக திடீரென நீர் பெருகும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் ஏனைய மக்கள் நீர்வீழ்ச்சிகளை சுற்றி நீராடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராவணா நீர்வீழ்ச்சியின் நீர் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடுதியாக காட்டு வெள்ளம் வரக்கூடிய அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments