Header Ads Widget

Responsive Advertisement

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக் கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸ் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் 2004/2005 கலைப்பீட மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு பல்கலைக்கழக ஆற்றங்கரை முன்றலில் நடைபெற்றது.

அந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அன்றைய தினம் சகல பீடங்களிலும் கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் கண்காட்சிகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தினை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் நிகழ்வானது வரலாற்றில் முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தினை பொதுமக்கள்  ஒக்டோபர் 24, 25ஆம் திகதிகளில் கால 09.00 மணி தொடக்கம் - இரவு 08.00 மணி வரை நேரில் சென்று பார்யிட முடியும். 

அத்துடன் பார்வையிட வருபவர்களுக்காக, கலை கலாசர நிகழ்வுகளையும் பல்கலைக் கழக கல்விசார் நடவடிக்கைகளையும், கண்காட்சிகள் என அனைத்தையும் கண்டுகழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் இரண்டு நட்களிலும் பல்கலைக்கழத்தையும், ஏனைய கலை கலசார நிகழ்வுகளையும் நேரடியாக காண முடியும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸ் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments