Header Ads Widget

Responsive Advertisement

icc word cup 2023: நியூசிலாந்தை 5 ஓட்டங்களால் வென்ற அவுஸ்திரேலியா!

icc word cup 2023: நியூசிலாந்தை 5 ஓட்டங்களால் வென்ற அவுஸ்திரேலியா!

icc word cup 2023: நியூசிலாந்தை 5 ஓட்டங்களால் வென்ற அவுஸ்திரேலியா!

icc word cup 2023: நியூசிலாந்தை 5 ஓட்டங்களால் வென்ற அவுஸ்திரேலியா!

உலகக் கிண்ணம் 2023: இந்தியாவின் தர்மசாலாவில் இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 27ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 5 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுதிஸ்ரேலிய அணி 50 ஓவர்களில் 388 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலியா சார்பாக டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ஓட்டங்களையும், டேவிட் வோனர் 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். கிளென் மெக்ஸ்வெல் 24 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிரன் போல்ட் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

383 ஓட்டங்களைப் பெற்றவேண்டும் என பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே வேகமாக துடுப்பெடுத்தாடியது.

தொடர்ந்து, நியூசிலாந்து அணி சார்பாக ரச்சின் ரவீந்த்ரா 89 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். டரில் மிச்செல் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஜேம்ஸ் நீசம், வெற்றிபெறக்கூடிய தருணத்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவை என்றிருந்த போது, மிச்சல் ஸ்டார்க் பந்துவீசினார்.

இறுதி ஓவரின் இரண்டாவது பந்தை அகலப்பந்தாக வீசியதோடு, நான்கு ஓட்டமாகவும் அமைந்தது.  இந்த நிலையில் 5 பந்துகளில் 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.

நீசம் அடித்தாட முனைந்த போதும் அவுஸ்திரேலிய அணியின் சிறப்பான களத்தடுப்பின் காரணமாக பவுண்டரிகள் தடுக்கப்பட்டன.

இரண்டு பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நீசம் ரன் அவுட் ஆக நியூசிலாந்தின் வெற்றிக் கனவு தகர்ந்தது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி 5 ஓட்டங்களால் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது.

போட்டியில் தறமையை வெளிப்படுத்திய  டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தெரிவானார்.

Post a Comment

0 Comments