icc world cup 2023: இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்!
![]() |
icc world cup 2023: இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்! |
icc world cup 2023: இந்தியா, டெல்லி, அருண் ஜய்ட்லி விளையாட்டங்கில் இன்று திங்கட்கிழமை (06) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 3 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிகொண்டது. உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கையை பங்களாதேஷ் கோக்கடித்தது முதல் தடவையாகும்.
இலங்கை அணி பெற்ற இந்த தோல்வியுடன் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் விளையாட தகுதிபெறுமா? கோள்விக்குறியாக உள்ளது.
icc world cup 2023: போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது.
ஏஞ்சலோ மெத்யூஸின் விசித்திரமான ஆட்டம் இழப்பு.
இலங்கை அணி அழுத்தத்தை எதிர்கொண்ட போதிலும் சரித் அசலன்க நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்தினார்.
சரித் அசலன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்து இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினார்.
சரித் அசலன்க உலகக் கிண்ணப் போட்டியில் பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.
105 பந்துகளை எதிர்கொண்ட அசலன்க 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார்.
இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸன்க (41), சதீர சமரவிக்ரம (41), தனஞ்சய டி சில்வா (34), மஹீஷ் தீக்ஷன (21) ஆகியோர் 20 ஓட்டங்களுக்கு மேல் குவித்தனர்.
விசித்திரமான முறையில் ஆட்டமிழப்பு செய்யப்படு மெத்யூஸ் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
சதீர சமர ஆட்டம் இழந்தத் தொடர்ந்து களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே நேரத்தை வீணடித்தார் என்பதற்காக ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
விசித்திரமான முறையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் ஆட்டம் இழந்தாக அறிவிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
சதீர சமரவிக்ரம ஆட்டம் இழந்த பின்னர் களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் துடுப்பெடுத்தாடத் தயாரானபோது அவரது தலைக்கவச பட்டி அறுந்துவிட்டது.
அதனை மத்தியஸ்தரிடம் காட்டிய மெத்யூஸ் வேறு ஒரு தலைக்கவசத்தைக் கொண்டு வருமாறு தனது அணியின் மாற்று வீரருக்கு சமிக்ஞை கொடுத்தார்.
இதனிடையே மெத்யூஸ் நேரத்தை வீணடிக்கிறார் எனத் தெரிவித்து மத்தியஸ்தரிடம் ஷக்கிப் அல் ஹசன் கேள்வி எழுப்பினார்.
அதனைத் அடுத்து மெத்யூஸ் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் மராய்ஸ் இரேஸ்மஸ் தீர்ப்பு வழங்கினார்.
தலைக்கவச பட்டி அறுந்துபோனதை திரும்பத் திரும்ப காண்பித்து தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு மத்தியஸ்தரிடம் மெத்யூஸ் கோரினார்.
பங்களாதேஷ் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசனிடமும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு அளிக்குமாறு மெத்யூஸ் கோரினார்.
ஆனால், தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் மத்தியஸ்தர்தான் தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்து ஷக்கிப் அல் ஹசன் நழுவிவிட்டார்.
துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அடுத்த துப்பாட்ட வீரரின் நேரம் ஆரம்பகின்றது.
ஒரு அணியின் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து களம் புகும் வீரர் 3 நிமிடங்களுக்குள் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எம்.சி.சி கிரிக்கெட் விதிகளில் ஒன்றாகும்.
ஆனால் விளையாட்டு நிலைமைகள் (Playing conditions) 2 நிமிடங்களுக்குள் துடுப்பெடுத்தாட வேண்டும் எனக் கூறுகிறது.
ஆனால், மெத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கவில்லை என்பதற்காக அவர் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை ஷக்கிப் அல் ஹசன் பின்பற்றத் தவறிவிட்டதாக கிரிக்கெட் வர்ணனையாளர் வக்கார் யூனிஸ் குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஷொரிபுல் இஸ்லாம் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த பங்களாதேஷ் அணி இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 280 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை ஈட்டியது.
பங்களாதேஷ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தன்ஸித் ஹசன் 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மதுஷன்கவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இவர் ஆட்டமிழக்கும் போது பங்களாதேஷ் அணி 17 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்தது.
பங்களாதேஷ் அணியின் மொத்த எண்ணிக்கை 18 ஓட்டங்களாக இருந்தபோது மதுஷன்கவின் பந்துவீச்சில் லிட்டன் தாஸ் கொடுத்த வாய்ப்புப் பிடியை குசல் பெரேரா தவறவிட்டார்.
எனினும் தாஸ் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மதுஷன்கவின் யோக்கர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இவர் ஆட்டமிழக்கும் போது பங்களாதேஷ் அணி 41 ஓட்டங்களுக்கு 2ஆவது விக்கெட்டை இழந்தது.
இதனைத் தொடர்ந்து வந்த அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் 8 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மெத்யூஸின் பந்துவீச்சில் கொடுத்த பிடியை சரித் அசலன்க தவறவிட்டார்.
அசலங்க விட்ட தவறை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஷக்கிப் அல் ஹசன் உத்வேகத்துடன் துடுப்பெடுத்தாடி நஜ்முல் ஹொசெய்ன சன்டோவுடன் 3ஆவது விக்கெட்டில் 159 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணிக்கு உந்து சக்தியைக் கொடுத்தார்.
தொடர்ந்து Timed Out முறைக்கு காரணமாக இருந்த ஷக்கிப் அல் ஹசனின் விக்கெட்டைக் கைப்பற்றி மெத்யூஸ் பதிலடி கொடுத்தார். ஷக்கிப் அல் ஹசனின் பிடியை சரித் அசலன்கவே எடுத்தார். இவர் ஆட்டமிழக்கும் போது பங்களாதேஷ் அணி 210 ஓட்டங்களுக்கு 3ஆவது விக்கெட்டை இழந்தது.
மொத்த எண்ணிக்கைக்கு ஒரு ஓட்டம் மாத்திரம் சேர்ந்த நிலையில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த நஜ்முல் ஹொசெயன் ஷன்டோவை மெத்யூஸ் போல்ட் ஆக்கினார். ஷன்டோ 90 ஓட்டங்களைப் பெற்றார். இவர் ஆட்டமிழக்கும் போது பங்களாதேஷ் அணி 211 ஓட்டங்களுக்கு 4ஆவது விக்கெட்டை இழந்தது.
இதனையடுத்து மஹ்முதுல்லா, முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது முஷ்பிக்குர் ரஹிமின் (10) விக்கெட்டை மதுஷன்க வீழ்த்தினார்.
தொடர்ந்து, மஹ்முதுல்லா 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தீக்ஷனவினால் போல்ட் செய்யப்பட்டார். இவர் ஆட்டமிழக்கும் போது பங்களாதேஷ் அணி 225 ஓட்டங்களுக்கு 6ஆவது விக்கெட்டை இழந்தது.
அவரைத் தொடர்ந்து மெஹிதி ஹசன் மிராஸ் 3 ஓட்டங்களுடன் தீக்ஷனவின் பந்துவீச்சில் களம் ஆட்டமிழந்ததார்.
எனினும் தௌஹித் ரிதோய் ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்களுடனும், தன்ஸிம் ஹசன் சக்கிப் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் பங்களாதேஷின் வெற்றி இலக்கை கடந்தனர்.
இலங்கை அணி சார்பாக, பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 21ஆக உயர்த்திக்கொண்டார்.
ஏஞ்சலோ மெத்யூஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
icc world cup 2023: போட்டியில் தனது அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்திய ஷக்கிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருதை தன்வசப்படுத்தினார்.

0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again